உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கவர்னர் மீது பாலியல் புகார்: பா.ஜ.,வினருக்கு மம்தா கேள்வி

கவர்னர் மீது பாலியல் புகார்: பா.ஜ.,வினருக்கு மம்தா கேள்வி

கோல்கட்டா: சந்தேஷ்காலி கலவரம் குறித்து அலறும் பா.ஜ.,வினர் கவர்னர் மீதான பாலியல் புகாருக்கு என்ன பதில் சொல்ல போகின்றனர் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.மேற்கு வங்க கவர்னர் சி.வி.ஆனந்த போஸ், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தற்காலிக பெண் பணியாளர் அளித்த புகாரை அடுத்து, கவர்னர் மாளிகைக்குள் போலீஸ் நுழைய தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து நிகழ்ச்சி ஒன்றி மேற்குவங்க ஆளும் திரிணமுல் காங்., முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது, கவர்னர் மாளிகையில் பணியாற்றிய இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பெண் கண்ணீர் வடிப்பதை பார்த்து, என் இதயமே உடைந்து விட்டது. சந்தேஷ்காலி கலவரம் பற்றி அலறும் பா.ஜ.,வினர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றனர். மேற்கு வங்கத்துக்கு வந்த பிரதமர், இதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன்? இவ்வாறு முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Jose Varghese
மே 06, 2024 18:25

அப்படியே பிரிஜ் பூஷன், ரேவண்ணா ஆகியோரும் குற்றமற்றவர்கள் என்று சொல்லிவிடுங்கள்


Barakat Ali
மே 05, 2024 17:11

மேற்குவங்க கவர்னர் பொய்வழக்கில் சிக்கிக்கொண்டார் அது திரிணாமூல் மாடல் இப்படி ஒரு ஐடியா இருக்கோ என்று திராவிட மாடல் யோசிக்கும்


venugopal s
மே 04, 2024 17:15

பாஜகவின் கொள்கையே மற்ற கட்சியினர் செய்தால் மட்டுமே தவறு, அதையே அவர்கள் செய்தால் தவறில்லை என்பது தானே!


Rajasekar Jayaraman
மே 04, 2024 11:57

ஏன் பாட்டி பொய்யை பொருத்தமா சொல்லணும் ஒரு பாய் இருக்கிற சொத்தை எல்லாம் புடிங்கிட்டு பாலியல் வன்கொடுமை பண்ணிட்டு அவனை செய்ய விட்டுட்டு சும்மா இருக்குற கவர்னர் மேல கைய புடிச்சு இழுத்தானு சொல்ற நல்லாவா இருக்கு.


RAAJ68
மே 04, 2024 07:54

அப்படியானால் சந்தேஷ் காளி சம்பவத்தை நியாயப்படுத்துகிறீர்களா.


J.V. Iyer
மே 04, 2024 04:25

மம்தா தீதி மேலேயே எண்ணற்ற புகார்கள், வழக்குகள், குற்றச்சாட்டுகள் இதற்கெல்லாம் பதில் கூறாமல், பொய்யாக ஜோடித்த வழக்குக்கு என்னமாய் பாய்ந்து பாய்ந்து பேசுகிறார் கெட்டமனுஷி அய்யா இந்த தீதி


Oru Indiyan
மே 04, 2024 03:16

அந்த காலத்திலேயே ஜெயலலிதா, "ஆளுநர் என் கையை பிடித்து இழுத்து விட்டார்" என்று சொன்னார் மம்தா ஜெயாவை பார்த்து காப்பி அடிக்கிறார்☺️


தாமரை மலர்கிறது
மே 03, 2024 23:03

பொய் சொல்வது மம்தாவிற்கு கைவந்த கலை கவர்னர் அப்பழுக்கற்றவர் நேர்மையானவர் சிறந்த தேசப்பற்றாளர் அவர் மம்தா செய்யும் ஊழல்களை தடுக்கிறார் என்ற காழ்ப்புணர்ச்சியில் அவர் மீது அபாண்ட குற்றச்சாட்டுகளை மம்தா வீசுகிறார் வாய்மையே வெல்லும் என்று நேர்மையான கவர்னர் கூறியுள்ளார் இது அவரின் பெருந்தன்மையை காட்டியுள்ளது


Syed ghouse basha
மே 03, 2024 22:49

பஜக வினருக்கு அதற்க்கு ஸ்பெஷல் பெர்மிட் இருப்பது மம்தாவுக்கு தெரியாது போல


C.SRIRAM
மே 03, 2024 22:33

கேடு கெட்ட அரசியல் வியாதி பொய் சொல்றது அப்பட்டமா தெரியுது


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி