உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பழங்குடியினரை அவமானப்படுத்தும் விஷயம்: கெஜ்ரிவால் ஆவேசம்

பழங்குடியினரை அவமானப்படுத்தும் விஷயம்: கெஜ்ரிவால் ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: குஜராத் ஆம்ஆத்மி எம்.எல்.ஏ., சைத்ரா வசவா மற்றும் அவரது மனைவியை கைது செய்தது பழங்குடியினரை அவமானப்படுத்தும் விஷயம் என கெஜ்ரிவால் கூறியுள்ளார். அமலாக்கத்துறையின் கைது அச்சத்திற்கு மத்தியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று குஜராத் சென்றார். சமீபத்தில், நர்மதா மாவட்டத்தில் வனத்துறை அதிகாரிகளை மிரட்டியதாக கூறி ஆம்ஆத்மி எம்.எல்.ஏ., சைதர் வாசவா மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் குஜராத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசியதாவதாவது: குஜராத் முழுவதும் பா.ஜ., யாருக்காவது பயந்தால் அது எம்.எல்.ஏ., சைத்ரா வசவாக்கு தான். வரும் காலங்களில் சைத்ரா வாசவா பா.ஜ.,வுக்கு அச்சுறுத்தலாக இருப்பார். எம்.எல்.ஏ., சைத்ரா வசவா மற்றும் அவரது மனைவியை கைது செய்தது பழங்குடியினரை அவமானப்படுத்தும் விஷயம்.பா.ஜ.,வில் இணைந்தால் அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என சைத்ரா வாசவாவுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். வரும் லோக்சபா தேர்தலில் பாரூச் தொகுதியில் சைத்ரா வாசவா போட்டியிடுவார் என இன்று அறிவிக்கிறேன். நாளை சிறையில் உள்ள சைத்ரா வாசவாவை சந்திக்க உள்ளேன். கொள்ளையர்களை விட பாஜகவினர் மோசமானவர்கள். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Sridhar
ஜன 08, 2024 13:40

திருட்டு பசங்கள பிரீ யா உட்டா இப்படித்தான் கண்ட மெட்ர எடுத்து வாய்க்குவந்தபடி பேசிக்கிட்டுருப்பாங்க. இவனை ஏன் இன்னும் வெளியே விட்டுவைத்திருக்கிறார்கள்?


Sampath Kumar
ஜன 08, 2024 10:22

பிஜேபி காரனின் சித்துவிளையாட்டு கரணம் போட்டு காரியம் சாதிக்க துடிப்பது புரிகின்றது இந்தனை காலா ஆட்சில பிஜேபி காரன் பூத ஆட்டம் என்ன என்று இந்திய முழுவதும் அம்பாலா பட்டு விட்டது தன கோவணத்தை இளந்த ஆண்டிபோல அலறுவது தெரிகின்றது அதுனால தன தனுக்கு எதிராக யார் என்றாலும் அவர்களை அளிக்க துடிக்கிறது ஐயோ பாவம் வேலை வந்து விட்டது மக்களுக்கு இந்த வீணர்களை வீட்டுக்கு அனுப்ப


Ramesh Sargam
ஜன 08, 2024 07:07

கெஜ்ரிவால் நாட்டுக்கே ஒரு மிகப்பெரிய அவமானம்.


Godyes
ஜன 08, 2024 03:41

இன்னும் ஏண்டா நல்லாஇருக்கறவன்களை பழங்குடி பேர்ல ஓட்டு வங்கியாக்கி வச்சிருக்கீங்க


Parthasarathy Badrinarayanan
ஜன 07, 2024 21:59

பழங்குடியின் பிரதிநிதியான மதிப்பிற்குரிய திரௌபதி முர்மு அவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்காமல், எதிர்த்து வேலைசெய்த உத்தமர் பழங்குடி மக்களைப் பற்றிக் கவலப்படுவதாக நாடகமாடுகிறார்


sankar
ஜன 07, 2024 20:55

இரவல் வார்த்தை - ஏற்கெனவே அன்பு மருமகன் ராசாவுக்காக கருணாநிதி எய்த ஜாதி அஸ்திரம்


S.Balakrishnan
ஜன 07, 2024 19:47

திருடன் கூட்டத்தில் புகுந்து கொண்டு திருடன் திருடன் என்று கத்திய கதையாக இருக்கிறது - இந்த மாண்புமிகு முதலமைச்சர் கூறுவது ! கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் இப்படி எல்லாம் பேசி அரசியல் செய்வது தான் ஆம் ஆத்மி கட்சிக்கு இலட்சியமா ? இவரெல்லாம் படித்து இந்திய நாட்டில் உயர் அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்தது இப்படி ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வாழ்வதும் ஒரு வாழ்வா ?


Ramaraj P
ஜன 07, 2024 19:44

இந்த முறை டெல்லி பா.ஜ.க வசம் வந்து விடும்.பிறகு குப்பை சுத்தம் செய்யும் வேலை தான்.டெல்லியில் கெஜ்ரிவால் தோற்ற பிறகு பஞ்சாப் முதல்வர் பகவான்ட் மாண் கெஜ்ரியை கழட்டி விடுவார்.அப்போ தெரியும் நீ ஹசாரே வுக்கு செய்தது.முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ????️????️


duruvasar
ஜன 07, 2024 19:23

யோவ் பாஜவுக்கு வந்தால் மந்திரி பதவி ஏற்கனவே ஒரு வருடத்திற்கு முன்பே மனீஷ் சிசோடியா உருட்டி விட்டார். இது அதர பழைய உருட்டு. புதுசா ஏதாவது உருட்டுங்க.


ராஜா
ஜன 07, 2024 19:13

தவறு செய்த பழங்குடியினர், சிறுபான்மையினர், தலித்துகள், அரசியல்வாதிகள் யார் தவறு செய்தாலும் கைது செய்யக்கூடாது என்று இந்த நாட்டில் எழுதப்படாத சட்டம் எதுவும் உள்ளதா?


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி