உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சித்துார் மேயர், கணவர் கொலை: 5 பேருக்கு மரண தண்டனை

சித்துார் மேயர், கணவர் கொலை: 5 பேருக்கு மரண தண்டனை

சித்துார்: ஆந்திராவின் சித்துார் முன்னாள் மேயர் அனுராதா, அவரது கணவர் மோகன் ஆகிய இருவரையும் மாநகராட்சி அலுவலகத்தில் புகுந்து மர்ம கும்பல் கொலை செய்த வழக்கில், ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. ஆந்திராவின் சித்துார் மாநகராட்சியில் கடந்த, 2015ல் மேயராக இருந்தவர் தெலுங்கு தேசத்தை சேர்ந்த கட்டாரி அனுராதா. இவரது கணவர் மோகன். கடந்த, 2015 நவம்பரில் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த மோகனை மர்ம கும்பல் ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தது. அ தை தடுத்த மேயர் அனுராதாவையும், அந்த கும்பல் து ப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. இது தொடர்பாக சித்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 57 சாட்சிகளிடம் வாக்குமூலம் பெற்றனர். வழக்கு விசாரணை, சித்துார் மாவட்ட கூடுதல் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது. 27 பேர் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 10 ஆண்டுகளாக நடந்து வந் த விசாரணையில் கடந்த அக்., 24ல் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த இரட்டை கொலை வழக்கில் அரசியல் முன்விரோதம் காரணமாக மேயர் அனுராதா, அவரது கணவர் மோகன் ஆகியோரை, கூலிப்படையை ஏவி மோகனின் உறவினர் சந்திரசேகர் கொலை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் ஐந்து பேரை குற்றவாளியாக உறுதிசெய்த நீதிமன்றம், அவர்களுக்கான தண்டனையை நேற்று அறிவித்தது. அதில் சந்திரசேகர், வெங்கடாசலபதி, ஜெயப்பிரகாஷ் ரெட்டி, மஞ்சுநாத், வெங்கடேஷ் ஆகிய ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை