உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மழைக்காலத்தில் காண கிடைக்கும் சிம்ஷா நீர்வீழ்ச்சி

மழைக்காலத்தில் காண கிடைக்கும் சிம்ஷா நீர்வீழ்ச்சி

மழைக்காலம் என்றால், சுற்றுலா பயணியர் குஷி அடைகின்றனர். எங்கெங்கு ஆறுகள், நீர் வீழ்ச்சிகள், அணைகள் உள்ளன என, தேடி தேடி ரசிப்பர். சுற்றுலா பயணியரை ஈர்க்கும் இடங்களில் சிம்ஷா நீர் வீழ்ச்சியும் ஒன்றாகும்.மழைக் காலங்களில் நீர் வீழ்ச்சிகளை ரசிப்பது, மனதுக்கு பேரானந்தம் அளிக்கும் என்பது, அனுபவப்பூர்வமான உண்மையாகும். மழைக்காலம் எப்போது வரும் என, காத்திருப்பர்.

மழைக்காலம்

இப்போது தென்மேற்கு பருவ மழைக்காலம், கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்வதால், அணைகள், ஆறுகள், நீர் வீழ்ச்சிகளில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. சொர்க்கமே தரையிறங்கியதை போன்று, மனதை கொள்ளை கொள்கிறது.கர்நாடகாவில், இதுபோன்ற இயற்கை எழில் தாலாட்டும் இடங்களுக்கு பஞ்சமே இல்லை. இவற்றில் சிம்ஷா நீர் வீழ்ச்சியும் ஒன்றாகும். இங்கு மழை பெய்தால் மட்டுமே, சுற்றுலா பயணியர் வருகின்றனர். மற்ற நாட்களில் வருவதல்லை. எனவே இந்த நீர் நீர் வீழ்ச்சி அவ்வளவாக பிரபலம் அடையவில்லை.மாண்டியா மாவட்டம், மலவள்ளி தாலுகாவின், ஹலகூரு கிராமம் அருகில் பாயும் சிம்ஷா ஆற்றில் இருந்து, சிம்ஷா நீர் வீழ்ச்சி உருவாகியுள்ளது. நீர் வீழ்ச்சியின் அழகை காண்பது அரிது. ஏனென்றால் மழை பெய்தால் மட்டும்தான், இந்த நீர் வீழ்ச்சியின் ஜல நர்த்தனத்தை காண முடியும். தற்போது நீர் வீழ்ச்சி நளினமாக நர்த்தனமாடுகிறது. இந்த அழகை காண தொலைவில் உள்ள நகர்களில் இருந்தும், சுற்றுலா பயணியர் குவிகின்றனர்.சிம்ஷா நீர் வீழ்ச்சி உள்ள இடம், கரும்பாறைகளால் சூழப்பட்டதாகும். சிம்ஷா ஆற்றில் ஆண்டின் அனைத்து நாட்களிலும், தண்ணீர் பாய்வதில்லை. அதிகமான மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், நீர் பாய்ந்து வரும்.

கரும்பாறைகள்

அப்போது நீர்வீழ்ச்சி களை கட்டும். அப்போது சென்றால் கரும்பாறைகள் மீது, பால் நுரையாக பொங்கி பாயும் அற்புதமான காட்சியை காணலாம்.நீர் வீழ்ச்சிக்கு குறிப்பிட்ட பெயர் இல்லை. மக்கள் தங்களுக்கு விருப்பமான பெயரில் அழைக்கின்றனர். மாண்டியாவின் நயாகரா என, பிரசித்தி பெற்றுள்ளது. ஆனால் நீர் வீழ்ச்சியை பார்க்க செல்வது, அவ்வளவு எளிதல்ல. ஏனென்றால் இங்கு செல்ல சரியான ரோடு வசதி இல்லை. இதனால் ஹலகூரில் அற்புதமான நீர் வீழ்ச்சி இருப்பதே, பலருக்கும் தெரிவது இல்லை.காட்டுப்பாதையில் நடந்து சென்று, நீர் வீழ்ச்சியை காண வேண்டும். ஒரு முறை இதை கண்டால், கண்களை எடுக்கவே முடியாது. 100 அடி உயரத்தில் இருந்து கீழே பாயும் தண்ணீர், அதன்பின் சிறு, சிறு நீர் வீழ்ச்சிகளாக பிரிந்து, வளைந்து, நெளிந்து பாயும் அழகை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இதை அனுபவித்து உணர்ந்தவர்கள், மழைக்காலத்தில் சிம்ஷா நீர் வீழ்ச்சியை காண தவறுவது இல்லை.எப்படி செல்வது?மலவள்ளியின், ஹலகூரில் இருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ளது. இதை காண விரும்பும் சுற்றுலா பயணியர், ஹலகூரில் இருந்து, முத்தத்திக்கு செல்லும் பாதை வழியாக, ஐந்து கி.மீ., தொலைவு செல்ல வேண்டும். அங்கு ரோடு இரண்டாக பிரியும். வலது புறம் திரும்பி பீரோடா கிராமத்தை நோக்கி செல்லும் பாதையில் சென்றால், கரலகட்டே, காணாலு, கெஞ்சபோவிதொட்டி கிராமத்தை அடையலாம். இங்கிருந்து 200 மீட்டர் தொலைவு சென்றால், சிம்ஷா நீர் வீழ்ச்சியை அடையலாம்.முதன் முறையாக இங்கு செல்லும் சுற்றுலா பயணியர், உள்ளூர் வழிகாட்டியை உடன் அழைத்து செல்வது நல்லது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S.jayaram
ஆக 08, 2024 06:47

எங்கேப்பா இங்கே உள்ள ஒகெனேக்களுக்கே வெள்ளம் வந்தால் தான் நீரை காணமுடிகிறது இதில் சிம்சா நீர்வீழ்ச்சியில்லாம் சான்சே இல்லை, காவேரி பிரச்சினையில் சுமூக தீர்வு காண எனக்கு தெரிந்த ஒரு யோசனை, இதில் சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களும் அமர்ந்து பேசி கர்நாடகா, கேரளாவில் பருவமழை பெய்யும் காலங்களில் 1974 க்கு முன் இருந்ததை போல krs, மேட்டூர் இரன்டு அனைகளையும் முதலில் நிரப்பி விட்டு பின்னர் கட்டிய அணைகளில் நீர் தேக்கலாம் அதன் பின் மாதாமாதம் கொடுக்க வேண்டிய அளவு தண்ணீரை கொடுக்கலாம் அதிகப் படியாக வரும் நீரை மேகதாதுவில் அணை கட்டி சேமிக்கலாம் இது தற்காலிகமாக அதிகப்படியாக வரும் தண்ணீரை மட்டுமே தேக்குவதற்கு அனுமதி வழங்கலாம் இவற்றை கண்காணிக்க மாதந்தோறும் மத்திய அரசின் பிரதிநிதி தலைமையில் நான்கு மாநில உறுப்பினர்கள் அடங்கிய குழு நேரடியாக கண்காணிக்க ஏற்பாடு செய்யணும் அதேசமயம் தமிழ்நாட்டில் விரைவில் நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல் படுத்தனும் தண்ணீர் krs,கபினியில் இருந்து தமிழகத்திற்கு வரும் தண்ணீர் பாதையை தடுக்காமல் உபரி நீர் மட்டும் செல்லும் அளவிற்கு வழி மேகதாதுவிற்கு அமைக்கணும், முதலில் KRS, மேட்டூர் அணைகள் நிரப்பபடனும், அதன் பின் கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் நிறப்பபடனும், அதன் பின் தமிழகத்திற்கு கோர்ட் தீர்ப்புபடி தர வேண்டிய தண்ணீர் மாதாமாதம் திறந்து விட்டு மீதி உபரி நீரை மேகத்தாதுவிற்கு கொண்டு செல்லலாம், இதற்கு கர்நாடகா ஒத்துக்கொண்டால் மேகதாது அணைக்கு அனுமதி அளிக்கலாம் இரண்டு மாநில மக்களும் எந்தவித பிரச்சினையும் இன்றி வாழ்வர்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை