உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லி. கூட்டத்தொடரின் முதல்நாளிலே எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு

பார்லி. கூட்டத்தொடரின் முதல்நாளிலே எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு

புதுடில்லி: எஸ்ஐஆர் விவகாரம் தொடர்பாக பார்லிமெண்டில் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு அவைகளும் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.பார்லிமெண்டின் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று முற்பகல் 11 மணிக்கு தொடங்கியது. லோக் சபாவில் எஸ்ஐஆர் நடவடிக்கை குறித்த விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இந்த கோரிக்கை ஏற்கப்படாததால் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.அவையை செயல்பட விடாமல், எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் தொடர்ந்து கூச்சல், குழப்பம் எழுப்பியதால் முதலில் நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் மதியம் 2 மணிக்கு கூடிய போதும் அமளி அடங்கியது. இதையடுத்து, லோக்சபா நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதேபோன்று ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சிகள் இடைவிடாது அமளியில் ஈடுபட்டு, அவை நடவடிக்கைகளை முடக்கினர். பின்னர், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதன் காரணமாக ராஜ்யசபாவும் நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இந் நிலையில் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாளை காலை பார்லி. வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ