உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய சிபிஐ உதவியை நாடியது எஸ்ஐடி

பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய சிபிஐ உதவியை நாடியது எஸ்ஐடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: ஆபாச வீடியோ வழக்கில், பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய மற்ற நாடுகளின் உதவியை நாடும்படி சி.பி.ஐ.,க்கு கர்நாடக அரசின் சிறப்பு புலனாய்வு குழு( எஸ்ஐடி) கோரிக்கை விடுத்துள்ளது.முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா. இவர், ஹசன் தொகுதி எம்.பி., இவரது தந்தை ரேவண்ணா ஹொளேநரசிபுரா தொகுதி ம.ஜ.த., எம்.எல்.ஏ., சில பெண்களுடன் பிரஜ்வல் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது. பிரஜ்வலும், அவரது தந்தை ரேவண்ணாவும் தன்னை பலாத்காரம் செய்ததாக அவர்களது வீட்டு வேலைக்கார பெண் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உடன் வழக்கு சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஆபாச வீடியோ புகார் எழுந்த நிலையில் பிரஜ்வல் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். எஸ்ஐடி குழுவினர் சம்மன் அனுப்பியும் அவர் நாடு திரும்பவில்லை.இந்நிலையில், பிரஜ்வலை கைது செய்ய வெளிநாடுகளின் உதவியை நாடும்படி, சி.பி.ஐ.,க்கு எஸ்.ஐ.டி., அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர்.

கடிதம்

இதனிடையே, இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் கடிதம் எழுதி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை