உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாட்டில் 4 நாளுக்கு பிறகு 4 பேர் உயிருடன் மீட்பு: உறவினர்கள் மகிழ்ச்சி

வயநாட்டில் 4 நாளுக்கு பிறகு 4 பேர் உயிருடன் மீட்பு: உறவினர்கள் மகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வயநாடு: வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் நான்கு நாட்களுக்கு பிறகு 4 பேரை ராணுவ வீரர்கள் உயிருடன் மீட்டனர்.கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, அட்டமலை உள்ளிட்ட பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு பல இடங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மீட்பு பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் படையுடன் ராணுவ வீரர்களும் ஈடுபட்டு உள்ளனர்.சூரல்மலையில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் உள்ள படவெட்டி குன்னு என்ற இடத்தில், வசித்து வந்த 4 பேரை காணவில்லை என அவர்களது உறவினர்கள் ராணுவத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து இலகு ரக ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் வசித்த வீட்டிற்கு சென்று தேடினர். அப்போது, இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் சேற்றில் சிக்கிக் கொண்டு காயத்துடன் உயிருக்கு போராடியது தெரியவந்தது. அவர்களை மீட்ட ராணுவ வீரர்கள், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.நிலச்சரிவு ஏற்பட்டு 4 நாட்களுக்கு பிறகு அவர்கள் மீட்கப்பட்டது உறவினர்கள் மத்தியில் மகிழ்ச்சி அளித்து உள்ளது.

அதிகரிப்பு

இதனிடையே, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 326 ஆக அதிகரித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை