உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தென் கொரியாவின் பிரபல இசைக்குழு முதன் முறையாக இந்தியா வருகை

தென் கொரியாவின் பிரபல இசைக்குழு முதன் முறையாக இந்தியா வருகை

மும்பை: உலக புகழ் பெற்ற தென் கொரியாவை பூர்வீகமாக கொண்ட இசைக்குழு இன்று முதல் வரும் ஜன.,11 ம் தேதி வரையில் முதன் முறையாக இந்தியாவில் இசை நிகழ்ச்சிகளை ரசிகர்களுக்கு வழங்க உள்ளது.தென் கொரியாவை சேர்ந்த பிடிஎஸ் இசை குழுவில் ஜங் கூக் உள்ளிட்ட இளைஞர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களின் பாடல்கள் மற்றும் இசைகளுக்கு உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவிலும் குறிப்பிடத்தக்க அளவில் ரசிகர்களை கொண்டுள்ளனர். இந்நிலையில் மும்பையில் உள்ள மெஹபூப் ஸ்டுடியோவில் இன்று முதல்(டிச.,12) வரும் ஜன., 11-ம் தேதி வரையில் இசை நிகழ்ச்சியை நடத்துகி்ன்றனர். இவர்களின் இசை நிகழ்ச்சிகளை தென் கொரியாவை சேர்ந்த ஹைப் நிறுவனத்தின் இந்திய பிரிவு மற்றும் புக் மை ஷோ லைவ் ஆகியோர் இணைந்து வழங்க உள்ளனர். இது குறித்து ஹைப் செய்தி தொடர்பாளர் கூறுகையில் உலகளாவிய இசை கலைஞர்களை இந்திய ரசிகர்களுடன் இணைக்கும் அர்த்தமுள்ள கலாச்சார பாலங்களை உருவாக்குவதே எஙகளின் குறிக்கோள். அங்கு இந்தியாவின் குரல்கள் உலகளாவிய கதைகளாக மாறக்கூடும். இவ்வாறு கூறினார். மேலும் இசை நிகழ்ச்சியின் போது ஜங் கூக்கின் நினைவுகளை கூறும் வகையில் படங்கள், சாவி, மோதிரங்கள், நெக்லஸ்கள், நகைபெட்டிகள், டி-சர்ட்டுகள், தொப்பிகள் , உள்ளிட்ட பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது. முன்னதாக பிடிஎஸ் இசை குழுவினர் அவர்களின் மேப் ஆப்தி சோல் என்ற சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக 2020-ம் ஆண்டில் மும்பையில் இசைநிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கோவிட் தொற்று காரணமாக அவர்களின் பயணம் ரத்து செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை