உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கூட்டணி கட்சிகள் ஆளும் பீஹார் ஆந்திராவிற்கு சிறப்பு திட்டங்கள்

கூட்டணி கட்சிகள் ஆளும் பீஹார் ஆந்திராவிற்கு சிறப்பு திட்டங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.,வின் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் ஆளும் பீஹாருக்கும், தெலுங்கு தேசம் ஆட்சி செய்யும் ஆந்திராவிற்கும் மத்திய பட்ஜெட்டில் சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் பீஹார் மற்றும் ஆந்திராவிற்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு திட்டங்கள் பின்வருமாறுhttps://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vztuqlz9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பீஹார்

*பீஹாரில் 2400 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் ஆலைகள் அமைக்க ரூ.21,400 கோடி ஒதுக்கீடு*வெள்ள தடுப்பு பணிகளுக்கு ரூ.11,500 கோடி ஒதுக்கீடு*விஷ்ணு பாதம், மகா போதி, ராஜ்கிர் ஜைன ஆலயம் ஆகிய வழிபாடு தலங்கள் மேம்படுத்தப்படும்.*மாநிலத்தில் புதிய விமான நிலையம், மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.*நெடுஞ்சாலை அமைக்க ரூ.20 ஆயிரம் கோடி

ஆந்திரா

*அமராவதி நகரை கட்டமைக்க ரூ.15 ஆயிரம் கோடி*ஆந்திர பிரதேசம் மறு சீரமைப்பு திட்டத்தின் கீழ் குடிநீர், மின்சாரம், ரயில், சாலை உள்ளிட்ட கட்டமைப்புத் திட்டங்களுக்கு சிறப்பு நிதி*ஆந்திரா மறுசீரமைப்புக்கு சிறப்பு திட்டம் வகுக்கப்படும்.*ஆந்திரா, இரண்டாக பிரிக்கப்பட்டபோது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.

சிறப்பு திட்டங்கள்

*பீஹார், ஆந்திரா, ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்குவங்கம் மாநிலங்களை மேம்படுத்தி சிறப்பு திட்டங்கள் வகுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

J.Isaac
ஜூலை 23, 2024 21:45

கிண்டின அல்வா , பதம் தவறியதால் கல்கோனா மிட்டாய் ஆகிவிட்டது


sankaranarayanan
ஜூலை 23, 2024 21:23

ஆட்சியில் அரசியலில் சாமர்த்தியமும் விவேகமும் வேண்டும். கலைஞர் எவ்வளவு சாமர்த்தியமாக ஆண்டபோது ஒரு சமயம் பி.ஜெ.பி. யுடன் நட்புகொண்டு வாஜ்பாயாய் மந்திரி சபையில் மாறன், டி.ஆர்.பாலு, ராசா, நெப்போலியன் முதலியவர்களுக்கு அமைச்சர்கள் பதவி வாங்கிக்கொண்டார் பிறகு அதைவிட இன்னும் சாமர்த்தியமாக கான்கிராசு ஆட்சி செய்யும்போது மன்மோகன்சிங் மந்திரி சபையில் டி.ஆர்.பாலு, ராசா அழகிரி, கனிமொழி, தாயாநிதி, ஜெகத்ரட்சகன் என்று ஏகப்பட்ட தமிழக அமைச்சர்கள் பதவியை வாங்கிக்கொண்டு தமிழகத்திற்கு ஏகப்பட்ட நன்மைகளை பயன்களை மக்களுக்கு வாங்கிக்கொடுத்தார் அந்த அரசியல் சாதுரியம் இப்போது துளிகூட இல்லையே மக்கள்தான் அவதிப்படுகிறார்கள்


Easwar Kamal
ஜூலை 23, 2024 21:19

பிஜேபிக்கு அதர்வா இருக்கின்ற அந்த ரெண்டு மாநிலத்துக்கும் எக்ஸ்ட்ரா அமௌன்ட் மற்ற மாநிலங்கள் எல்லாம் வாயில விரலை வச்சுக்கிடணுமா? இப்படி ஓர வஞ்சனை செய்தல் மற்ற மாநிலங்கள் எப்படி முன்னேற்ற பாதையில் செல்ல முடியும்


v j antony
ஜூலை 23, 2024 17:58

பணம் வாங்கி கொண்டு திமுகவிற்கு ஓட்டு போட்டவர்கள் நீங்களும் கெட்டு நம் மாநிலத்தையும் கெடுத்துவிடீர்கள்


bal
ஜூலை 23, 2024 16:47

என்னவோ திட்டமாம் என்னவோ லட்சம் கோடிகள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால் தெருக்கள் மற்றும் ரயில் சேவை தவிர வேறொன்றும் கண்னுக்கு தென்படவில்லை.


Suresh
ஜூலை 23, 2024 16:27

தமிழகத்தில் ஒரு வருடத்திற்கு முப்பதாயிரம் கோடி முதல்வர் குடும்பத்திற்கு வருமானம் வருவதாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜனே ஒத்துக்கொண்டாரே.


Ms Mahadevan Mahadevan
ஜூலை 23, 2024 16:12

பிஜேபி இக்கு ஆதரவு கொடுத்தால் சலுகை என்பதும் இல்லாவிட்டால் நிதி உதவி இல்லை என்றால் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல


தநாவின் பரிதாபம்
ஜூலை 23, 2024 20:44

ஒட்டு மொத்த பட்ஜெட்டுமே நாட்டின் முன்னேற்றத்திற்குத்தான். தநாவும் நாட்டிற்குள் தான் உள்ளது. பெருந்தலைவர் மத்திய அரசுடன் நல்லுறவை நிலை நாட்டியதால் அறிய பெரிய திட்டங்கள் தநாவுக்கு வந்தது, உதாரணம் பெல் நிறுவணம். ஆனால் தற்போது மாநில அரசு எல்லா விசயத்திலும் மத்திய அரசை எதிர்த்து சும்மா கம்பு சுத்திட்டு அப்புறம் எங்களுக்கு ஒன்னுமே பன்னலைன்னு அங்கலாய்பது.


Svs Yaadum oore
ஜூலை 23, 2024 15:52

பீஹார் மற்றும் ஆந்திராவிற்கு சிறப்பு திட்டங்கள் அறிவிப்பு ....இங்குள்ள விடியல் திராவிடனுங்க அவனுங்க நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த சம்பாதித்த அவர்கள் வீட்டு பணத்தை எடுத்து ஆந்திராவுக்கு கொடுத்த மாதிரி உருட்டுவாங்க ... அந்தந்த மாநிலங்கள் செலுத்தும் வரி 60 முதல் 70 சதம் வரை அந்த மாநிலங்களுக்கே திரும்ப செல்லும் ..மீதி வரிப்பணம் மாநிலங்களில் மத்திய அரசு திட்டங்கள் , ராணுவம் மாநிலங்களுக்கு நிதி உதவி ..... விடியல் திராவிடங்க உருட்டுவது போல் ஒரு மாநில வரிப்பணத்தை எடுத்து மற்ற மாநிலங்களுக்கு கொடுப்பது இயலாது ....அதற்குத்தான் நிதி கமிஷன் ...


Swaminathan L
ஜூலை 23, 2024 15:46

இது எதிர்பார்த்தது தான்.


ஆரூர் ரங்
ஜூலை 23, 2024 15:29

எவ்வளவு சலுகை திட்டங்களை அளித்தாலும் அத்தனையும் போகும் என்றால் எதற்காக கொடுக்கணும்?


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை