புதுடில்லி: '' இரண்டாம் கட்டமாக தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடைபெற உள்ளது,'' என தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் அறிவித்துள்ளார்.பீஹார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்தது. அப்போது, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பல லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் இருந்ததும், வேறு மாநிலங்களுக்கு நிரந்தரமாக குடியேறியவர்களின் பெயர்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட மொத்தம் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதனையடுத்து எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=08qyawn0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வெற்றிகரம்
இந்நிலையில் டில்லியில் நிருபர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் கூறியதாவது: பீஹாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் வெற்றிகரமாக நடந்தது. இதில் 7.5 கோடி பேர் பங்கேற்றனர். யாரும் மேல்முறையீடு செய்யவில்லை.இரண்டாம் கட்டமாக 12மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடக்க உள்ளன. இதில் பிரச்னை ஏதும் இருந்தால் வாக்காளர்கள் மேல்முறையீடு செய்யலாம். சுதந்திரத்துக்கு பின்பு 9வது முறையாக இப்பணி நடக்கிறது. 1951 முதல் 2004 வரை 8 முறை நடந்துள்ளன. கடைசியாக 2002 முதல் 2004 வரை நடந்தது.பயிற்சி
பல்வேறு தருணங்களில் வாக்காளர் பட்டியலின் உண்மைத்தன்மை குறித்து அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன.தேர்தலில் வாக்காளர் பட்டியலில் உண்மைத்தன்மை முக்கியமானது. தகுதியான அனைவரின் பெயர்களை பட்டியலில் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடி அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் 3 முறை வந்து ஆய்வு செய்ய வேண்டும். அவர்களுக்கு நாளை முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி மிகவும் முக்கியமானது. வரும் தேர்தல்களில் புதிய ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் நடக்கும் மாநிலங்கள்
* தமிழகம்* புதுச்சேரி* அந்தமான் நிக்கோபார்* சத்தீஸ்கர்* கோவா* குஜராத்* கேரளா* லட்சத்தீவு* மத்திய பிரதேசம்* ராஜஸ்தான் * உத்தரப்பிரதேசம்* மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ளது. அசாமில் தற்போது நடைபெறவில்லை. அம்மாநிலத்தில் எப்போது நடக்கும் என்பது குறித்து பிறகு அறிவிக்கப்படும்.
நடக்கும் காலம்
நவ., 4 - டிச.,4 வரை வீடு, வீடாக சென்று விண்ணப்பம் பூர்த்தி செய்து பெறுதல்டிச., 9 ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு2026 பிப்., 7 ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடுடிச., 8 முதல் ஜன., 8 வரை ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம்ஜன.,31 வரை இதற்காக நோட்டீஸ் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும்.கடமை
ஞானேஸ்குமார் மேலும் கூறியதாவது: 51 கோடி வாக்காளர்களை குறித்து இப்பணி நடக்கிறது. 5.33 லட்சம் ஓட்டுச்சாவடி அதிகாரிகள் இப்பணியில் ஈடுபடுவார்கள். அரசியல் கட்சிகள் நியமிக்கும் ஓட்டுச்சாவடி முகவர்களும் அவர்களுடன் இணைந்து கொள்வர். இப்பணிக்கான பயிற்சி நாளை துவங்கி நவ., 3ல் நிறைவு பெறுகிறது. தேர்தல் நடத்துவதற்கும், வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கும் தேவையான அதிகாரிகளை வழங்க வேண்டியது மாநில அரசுகளின் கடமை.
கேரளா, மேற்கு வங்கத்தில்
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இதனால், அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடக்க உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள மேற்கு வங்கத்தில் முரண்பாடு இல்லை.
சான்றிதழ்
ஆதார் அட்டை குடியுரிமைக்கான ஆவணம் இல்லை. ஆனால், இப்பணியில் அடையாள சான்றாக பயன்படுத்தலாம். பிறந்த தேதிக்குமான சான்று கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
முடக்கம்
ஞானேஸ்குமார் கூறுகையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ள அனைத்து மாநிலங்களிலும் செவ்வாய்க்கிழமை அதிகாலை( திங்கட்கிழமை நள்ளிரவு) முதல் வாக்காளர் பட்டியல் முடக்கப்படும் என்றார்.