உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாணவி கர்ப்பம்: ஆந்திர பள்ளி முதல்வர் கைது

மாணவி கர்ப்பம்: ஆந்திர பள்ளி முதல்வர் கைது

கொனசீமா:ஆந்திராவின் கொனசீமா மாவட்டத்தில் உள்ள ராயவரம் பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு 9ம் வகுப்பு படிக்கும் மாணவியை பள்ளி முதல்வர் ஜெயராஜ், 4 மாதங்களுக்கு முன் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் மாணவியை மிரட்டிஉள்ளார். இதையடுத்து கடந்த மூன்று மாதங்களாக மாணவிக்கு மாதவிடாய் வராததால், பெற்றோர் அவரை டாக்டரிடம் அழைத்து சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து சிறுமியிடம் நடத்திய விசாரணையில், பள்ளி முதல்வர் ஜெயராஜ் பலாத்காரம் செய்ததில் சிறுமி மூன்று மாதம் கர்ப்பமானது தெரியவந்தது. இது குறித்து போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து தலைமறைவான முதல்வர் ஜெயராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை