தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம்
உச்ச நீதிமன்றத்தின், 52வது தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் பி.ஆர்.கவாய், நவ., 23ல் ஓய்வு பெற உள்ளார். இதனால், அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரைக்கும்படி, மத்திய சட்ட அமைச்சகம் அவரிடம் கேட்டிருந்தது. மூத்த நீதிபதி சூர்யகாந்தை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கும்படி, சட்ட அமைச்சகத்துக்கு தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் சமீபத்தில் பரிந்துரைத்தார். இந்த பரிந்துரையை ஜனாதிபதி திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்காக சட்ட அமைச்சகம் அனுப்பி இருந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சூர்யகாந்தை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று உத்தரவிட்டுள்ளார். 53வது தலைமை நீதிபதியாக, நவ., 24ல் பதவியேற்க உள்ள அவர், 2027 பிப்., 9 வரை பதவி வகிப்பார். - டில்லி சிறப்பு நிருபர் -: