உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆசிரியர் தகுதித்தேர்வு வினாத்தாள் கசிவு; மஹராஷ்டிராவில் 18 பேர் கைது

ஆசிரியர் தகுதித்தேர்வு வினாத்தாள் கசிவு; மஹராஷ்டிராவில் 18 பேர் கைது

மும்பை: மஹாராஷ்டிராவில் ஆசிரியர் தகுதித்தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மஹாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த நவ.,23ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வில் முறைகேடு நடந்ததாகவும், தேர்வு முன்பாகவே, வினாத்தாள் கசிய விட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். இந்த நிலையில், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான மகேஷ் கெயிக்வாட் உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது; எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த நவ.,23ம் தேதி குற்றப்பிரிவு போலீசார் மற்றும் முர்குட் போலீசார் இணைந்து, காகல் மாவட்டத்தில் உள்ள சோங்கே கிராமத்தில் இருக்கும் பர்னிச்சர் கடையில் சோதனை நடத்தினோம். அப்போது, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத இருந்த 5 இளைஞர்கள் அங்கு இருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது, ராகுல் பாட்டில் என்பவர் வினாத்தாளுடன் இங்கு வருவார் என்று கூறினார்கள்.இதையடுத்து, ராகுல் பாட்டில் மற்றும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். மகேஷ் கெயிக்வாட் கொடுக்கும் வினாத்தாளை ரூ.3 லட்சத்திற்கு விற்க திட்டமிட்டிருந்ததாக ராகுல் பாட்டில் தெரிவித்தார். பின்னர், சாதரா மாவட்டத்தில் மகேஷ் கெயிக்வாட் கைது செய்யப்பட்டார். இதுவரையில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி