மேலும் செய்திகள்
பெரும் தவறு!
5 hour(s) ago
கடற்படை குறித்து பாக்.,கிற்கு தகவல் அனுப்பியவர் கைது
5 hour(s) ago | 1
திருமலையில் தெய்வீக மூலிகை தோட்டம்
5 hour(s) ago
அரசு பள்ளியில் பழங்கள் தின விழா
8 hour(s) ago
குறை சொல்ல வாங்கோ! கோல்டன் சிட்டியில் 15 கிராம பஞ்சாயத்துகளில் 128 கிராமங்கள் இருக்குது. தொகுதி அசெம்பிளி மேடம், எல்லா பஞ்சாயத்துகளிலுமே மக்கள் குறை கேட்க போறாங்களாம். எதுக்குன்னா, அங்கு தானே ஓட்டுகள் சிதறுது. அதை சரிக்கட்ட மக்கள் குறை அவதாரம் எடுத்திருக்காங்க.அதேபோல் தானே, நகரத்தின் தேவைகளை அசெம்பிளி தேர்தலுக்கு முன் 35 வார்டுகளிலும் சுழன்று சுழன்று குறை கேட்டாங்க. அப்போது, பிரியாணி பொட்டலமும், வீட்டு மனை விண்ணப்பங்களையும் கொடுத்தாங்க. அந்த விண்ணப்பங்கள் என்னானது. எத்தனை குடும்பங்களுக்கு மனைகள் கிடைத்தன, தெரிவிக்க வேணாமா. இதை எப்படி மறப்பாங்க.லோக்சபா தேர்தல் வரப்போகுது. நைனாவுக்கு 'சீட்' கிடைக்க போவதாக சொல்றாங்க. இவங்க வாங்கின 81,000த்தை தாண்டி 1 லட்சம் ஓட்டு கிடைக்க இப்பவே தயார் ஆகிட்டாங்களாம்.அதுக்காகவே பச்சை, கருப்பு சிவப்பு, நீலம் என எல்லா வண்ணக் கொடிகளும் 'பேக் அப்' லிஸ்ட்டில் இருக்குது. சில 'காவி' தரப்பினரையும் விட்டு வைக்கலயாம். மெயின் சுவிட்ச் எங்கே இருக்குன்னு தெரியுமாம்.தேர்தலில் ரூட் தெரிந்தவங்க கிராம ஓட்டுகள் தான் சிதறும் என்பதால் அங்கே தான் வளைத்து, வளைத்து குறை கேட்குறாங்களாம்.தேச பிதாவை மறந்துட்டாங்க!வாரியத் தலைவர் பதவி கிடைத்த பிறகு, முதல் முறையாக தொகுதிக்குள் வராங்க. அவருக்கு தடபுடல் ஏற்பாடுகளை அவங்க ஆதரவு விசிறிகள் செய்திருந்தாங்க.மந்திரி ரேங்க் கிடைச்சதாலே காக்கி தரப்பிலும் எல்லைக்கே வந்தாங்க. ஆனால் ஸ்பெஷல் அட்டென்ஷன் வேணாம்னு சேர்மன் திருப்பி அனுப்பிட்டாங்க. எளிமையானவர் என்பதை காட்டிக்கொண்டாங்க.கட்சி விசிறிகள் வரவேற்க காத்திருந்த இடத்துக்கு போகாமல் ரூட்டை மாத்திட்டாங்க. வி.நகர் வீட்டுக்கு போயிட்டாங்க. விபரம் கிடைத்த விசிறிகள், கெஞ்சி கூத்தாடி, சட்டபிதா பூங்காவுக்கு வருமாறு அழைத்தாங்க. மறுக்கவோ வெறுக்கவோ முடியாமல் 'சேர்மன்' வந்தாங்க. மாலை அணிவிக்க செய்தாங்க. அடுத்து ரா.பேட்டை, தேசப் பிதா சிலைக்கு மாலை அணிவிக்க ஏற்பாடு செய்தாங்க. ஆனால், தேசப்பிதாவுக்கு மாலை அணிவிக்க நேரமில்லை போல. சேர்மனின் கார் பறந்து விட்டது. தேசப்பிதா பக்தர்கள் வாடி போயிட்டாங்க. என்னம்மா இப்பிடி பண்ணிட்டீங்களேம்மான்னு கூட சொல்ல முடியல.
5 hour(s) ago
5 hour(s) ago | 1
5 hour(s) ago
8 hour(s) ago