உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திரிணமுல் காங்., தலைவர்களின் சவாலை ஏற்று அரசியல் களம் புகுந்தார் நீதிபதி!

திரிணமுல் காங்., தலைவர்களின் சவாலை ஏற்று அரசியல் களம் புகுந்தார் நீதிபதி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: 'அரசியல் களத்துக்கு வந்து பார்த்தால் தெரியும்' என்று திரிணமுல் காங்கிரஸ் தலைவர்களால் விடப்பட்ட சவாலை ஏற்ற கோல்கட்டா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயா, பதவியை ராஜினாமா செய்துள்ளார். அரசியலில் இறங்கி, தேர்தலில் போட்டியிடவும் முடிவு செய்துள்ளார்.கோல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் இன்று தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார், மேலும் தனது ராஜினாமா கடிதத்தை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் கோல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு அனுப்புவதாகவும் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில்,“செவ்வாய்கிழமை கோல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்கிறேன்... எனது ராஜினாமா கடிதத்தை இந்திய ஜனாதிபதிக்கும், கடிதத்தின் நகலை இந்திய தலைமை நீதிபதி மற்றும் கோல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் அனுப்புவேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி