உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பூண்டு விலை கிடுகிடு கிலோ ரூ.500

பூண்டு விலை கிடுகிடு கிலோ ரூ.500

பெங்களூரு : பூண்டு விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. கிலோவுக்கு 500 ரூபாயை எட்டியது.கர்நாடகாவில் வெங்காயம், தக்காளி விலை குறைந்த பின், பூண்டின் விலை ஏறுமுகமாகிறது. கடந்த இரண்டு மாதங்களாக, பூண்டின் விலை தொடர்ந்து அதிகரிக்கிறது. கிலோவுக்கு 200 ரூபாயாக இருந்த விலை, 300 ரூபாயானது சில வாரங்களாக 400 ரூபாயாக உயர்ந்தது.தற்போது 500 ரூபாயாக விற்கப்படுகிறது. இம்முறை மழை பொய்த்தது. இதனால் போதுமான அளவில் பூண்டு விளையவில்லை. சில இடங்களில் அதிகமான மழை பெய்து, வெள்ள பெருக்கு ஏற்பட்டது. வறட்சி, வெள்ளப்பெருக்கால் பூண்டு விளைச்சல் பாழானதே, விலை உயர்வுக்கு காரணம்.புதிய விளைச்சல் வரும் வரை, பூண்டின் விலை ஏறுமுகமாகவே இருக்கும் என, வியாபாரிகள் கூறியுள்ளனர். சமையலுக்கு அத்தியாவசியான பூண்டின் விலை, தொடர்ந்து அதிகரிப்பதால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை