உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமரை அவமதிக்கின்றனர்!

பிரதமரை அவமதிக்கின்றனர்!

நாட்டு மக்கள் பிரதமர் மோடிக்கு ஆட்சிஅதிகாரத்தை வழங்கியுள்ளனர். எதிர்க்கட்சிகள் அதை மறந்துவிட்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களை அவமானப்படுத்துகின்றனர். பிரதமர் குறித்து அவதுாறாக பேசுகின்றனர். மக்களின் முடிவை கொச்சைப்படுத்துவோருக்கு தேர்தல் நேரத்தில் பாடம் புகட்டுவர்.கிரண் ரிஜிஜு, மத்திய அமைச்சர், பா.ஜ.,

பா.ஜ., ஊழல் அம்பலம்!

உத்தர பிரதேச பா.ஜ., அரசு, ஊழலை துளி கூட சகிக்காது என்று கூறியது. தற்போது உ.பி., மாநில பா.ஜ.,வில் ஏற்பட்டுள்ள பிளவால், அக்கட்சியினரே கைக்கூலிகளாக மாறி ஊழல்களை அம்பலப்படுத்துகின்றனர். டில்லி தலைமைக்கு நெருக்கமாக உள்ள துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தான் அது என்று தெரிகிறது.அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாதி

காங்., கைக்கூலி அகிலேஷ்!

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் என்னை கைக்கூலி என்று கூறியுள்ளார். உண்மையில் அவர் தான் காங்கிரசின் கைக்கூலி. மாநிலத்தில் அவரது கட்சி அழிந்து கொண்டிருக்கிறது. அவர் முதலில் கட்சியை காப்பாற்ற கவனம் செலுத்த வேண்டும். 2027ம் ஆண்டிலும் பா.ஜ., வெற்றி தொடரும். தாமரையே எப்போதும் மலரும்.கேசவ் பிரசாத் மவுரியா, உ.பி., துணை முதல்வர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ