உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயதான ஏழை தச்சு தொழிலாளியிடம் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கொடுத்து மோசடி

வயதான ஏழை தச்சு தொழிலாளியிடம் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கொடுத்து மோசடி

திருவனந்தபுரம்: வயதான தச்சு தொழிலாளியிடம் ரூ. 2 ஆயிரம் நோட்டை கொடுத்து ஏமாற்றி மோசடி நடந்துள்ளது. கேரள மாநிலம் திரிசூர் அருகே செல்லக்கரையில் உள்ள நாட்டியன்சிரா பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் ஏழுதச்சன் 84. இவர் சிறிய அளவிலான தச்சு வேலை செய்து வந்தார். இவரிடம் வந்த ஒரு மர வியாபாரி ஒரு குறிப்பிட்ட மரங்களை வெட்டி தருமாறு ஒரு வேலையை கொடுத்தார். முதலில் 5 ஆயிரம் அட்வான்சாக வழங்கினார். மரங்கள் வாங்க வரும்போது மீதி தொகை 20 ஆயிரத்தை இரண்டாயிரம் ரூபாய் தாளாக கவரில் போட்டு வழங்கியுள்ளார். இவரும் நம்பிக்கையோடு வாங்கி வைத்துள்ளார். பண தேவைக்கு எடுத்து பார்க்கும் போது 2 ஆயிரம் ரூபாயாக இருந்தது கண்டு அதிர்ச்சியுற்றார். இதனை அவர் மாற்ற பல இடங்களுக்கு சென்று முயற்சித்தும் முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளானார்.

போஸ்ட் ஆபீஸ் ஊழியர்கள் கருணை

2 ஆயிரம் ரூபாய் செல்லாது என கடந்த 2023 மே மாதத்தில் அறிவிக்கப்பட்டது. இதனை மாற்ற அவகாசம் வழங்கி இது முடிந்து விட்டதால் 2 ஆயிரத்தை போஸ்ட் ஆபீசில் மட்டுமே கொடுக்க முடியும். இது ரிசர்வ் பாங்கிற்கு அனுப்பி வைத்து அங்கிருந்து உரிய பணம் வழங்க ஒப்புதல் கிடைத்ததும் வழங்கப்படும். இதன் விவரம் அறிந்து அவர் அருகில் உள்ள போஸ்ட் ஆபீசில் ஏழுதச்சன் வழங்கி உள்ளார். தாள் ஒன்றுக்கு இன்சூரன்சாக ரூ.173 வீதம் 1,730 ம் மேலும் போஸ்ட் ஆபீஸ் ஊழியர்கள் கருணையாக கொஞ்சம் உதவி தொகையும் வழங்கி அவரை வழி அனுப்பி வைத்தனர். 20 ஆயிரத்திற்காக காத்திருக்கிறார் முதியவர்.வறுமையில் வாடும் இந்த முதியவரான தச்சரை ஒருவர் ஏமாற்றி இருப்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Prasannan Prasannan
ஜூலை 26, 2024 05:38

Great Indian postal Department


Barakat Ali
ஜூலை 25, 2024 18:25

சேட்டன்கள் கொடிய விஷத்தையும் விட ஆபத்தானவர்கள் .....


Ram pollachi
ஜூலை 25, 2024 17:31

சீக்கிரம் பணம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்... நம்ம ஊர் அஞ்சல் துறையின் வேகம் பற்றி சொல்லி தெரிய வேண்டியது இல்லை.


Swaminathan L
ஜூலை 25, 2024 17:11

உழைப்புக்கான கூலியில் ஏமாற்றுபவர் விரைவில் பெரும் அனுபவம் பெறுவார்


Ram
ஜூலை 25, 2024 17:08

திராவிட திருடனாகவும் இருக்கலாம்


kantharvan
ஜூலை 25, 2024 18:00

கனவிலும் ராமருக்கு திராவிடம் என்றால் பயம் பயம்..


kantharvan
ஜூலை 25, 2024 18:01

கனவிலும் ராமருக்கு திராவிடம் என்றால் பயம் பயம்..


கும்பகோணத்து குசும்பன்
ஜூலை 26, 2024 07:31

கண்டிப்பாக 200₹ குரூப்பாகத்தான் இருக்கும். இல்லைனா கோபாலபுரம் கொத்தடிமையா இருப்பான்


Ramesh Sargam
ஜூலை 25, 2024 16:27

மோசடி செய்தவர் எங்கே? நோட்டுக்களை பறிமுதல் செய்து, அவரை சிறையில் அடைக்கவேண்டும்.


வாசகர்
ஜூலை 25, 2024 16:26

2000 ரூபாய் நோட்டு செல்லாதுன்னு அறிவிச்சது தான் தப்புன்னு ஒரு சில 200Rs இப்ப கிளம்புவாங்க பாருங்கள்


Velan
ஜூலை 25, 2024 16:20

. பதில் சொல்லியே தீரனும்


அப்புசாமி
ஜூலை 25, 2024 16:15

அந்த 2000 ரூவா நோட்டுக்களைக் குடுத்த மர வியாபாரி இன்னும் மர்ம நபராகவே இருக்காரு. நம்ம போலுசின் சாமத்தியம்.


S. Narayanan
ஜூலை 25, 2024 16:13

எத்தனுக்கு எத்தன் இவ்வுலகில். இருக்கிறான். அவன் இப்படி பட்ட ஆட்களை இரண்டு லட்சம் ரூபாய் எமற்றுவான்.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ