உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல்: நடிகர் திலீப் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு

நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல்: நடிகர் திலீப் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொச்சி: பிரபல மலையாள நடிகர் திலீப் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இன்று கொச்சி நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.பிரபல மலையாள நடிகர் திலீப். இவரது முன்னாள் மனைவி நடிகை மஞ்சு வாரியர். நடிகர் திலீப்பின் ரகசிய உறவுகளை இன்னொரு நடிகை, மஞ்சு வாரியரிடம் கூறிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மஞ்சு வாரியர், கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.இதற்கு, குறிப்பிட்ட அந்த நடிகை தான் காரணம் என்று திலீப் முடிவு செய்தார். அவர் ஏற்பாடு செய்த கூலிப்படை, நடிகையை காரில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியது. இந்த சம்பவம் கடந்த 2017ம் ஆண்டு நடந்தது. பிரபல நடிகர் நடிகைகள் சம்பந்தப்பட்ட இந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.வழக்கை விசாரித்த போலீசார், நடிகர் திலீப் மற்றும் சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்தனர். மலையாள திரையுலகில் அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பவும் இந்த சம்பவம் காரணமாக அமைந்தது.எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் கொச்சி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை