உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கூகுள் மேப் காட்டிய வழியில் சென்று ஆற்றில் சிக்கிய சுற்றுலா பயணிகள்

கூகுள் மேப் காட்டிய வழியில் சென்று ஆற்றில் சிக்கிய சுற்றுலா பயணிகள்

திருவனந்தபுரம்: கூகுள் மேப் உதவியுடன் கேரளாவிற்கு சுற்றுலா சென்றவர்கள், வழியில் காருடன் ஆற்றுக்குள் விழுந்த துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பில்லை.தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் கேரள மாநிலம் ஆலப்புழாவிற்கு சொகுசு காரில் சுற்றுலா சென்றனர். அந்த காரில் 3 ஆண்கள் மற்றும் ஒரு பெண் இருந்தார். கூகுள் மேப் உதவியுடன் காரை ஓட்டி வந்தார். டிரைவருக்கும் வழி தெரியாத காரணத்தினால் கூகுள் மேப்பை பார்த்து மட்டுமே காரை செலுத்தினார்.வழியில், கோட்டயம் வந்த போது, ஆற்றுக்குள் கார் விழுந்தது. உள்ளே இருந்தவர்கள் தத்தளித்தனர். உடனடியாக, அருகில் இருந்தவர்கள் அவர்களை பத்திரமாக மீட்டனர். ஆனால், கார் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.கடந்த ஆண்டு கூகுள் மேப் உதவியுடன் காரை ஓட்டி வந்த டாக்டர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இதனையடுத்து மழைகாலத்தில் கூகுள் மேப் உள்ளிட்ட தொழில்நுட்ப உதவியுடன் சுற்றுலா வருபவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Svs Yaadum oore
மே 25, 2024 16:34

....கூகிள் மேப் வந்த பிறகு மனிதனுக்கு மூளையை தனியாக கழட்டி வைத்து விட்டார்களா?? .... கடந்த ஆண்டு கூகுள் மேப் உதவியுடன் காரை ஓட்டி வந்த டாக்டர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனராம் ... இந்த டாக்டர்களிடம் வைத்தியம் பார்க்க போனவன் கதி என்னாகும் ??.....சென்னையில் தினம் தினம் வழியை மறித்து மாற்று வழி ....சுற்றி சுற்றி வந்தால் பிறகு ஆரம்பித்த இடத்துக்கே வந்து சேருவோம் ....


ديفيد رافائيل
மே 25, 2024 16:00

இவனுங்க ஏதோ தவறினால் accident ஆனதை மறைக்க google map மீது பழி சொல்ல வாய்ப்பிருக்கு, காரணம் நம்பும் படியாக இல்லை.


Muralidharan raghavan
மே 25, 2024 16:43

சில சமயம் அவ்வாறு தவறாக வழிகாட்டுவது உண்மைதான்


S SRINIVASAN
மே 25, 2024 14:52

GOOGLE map is only guidelines should not be trustworthy. I had a very bad experience following Google maps so pl be careful


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 25, 2024 14:06

கூகுள் மேப் காட்டினாலும் முன்னாள் தண்ணீர் செல்வது கூட தெரியாமல் எப்படி காரை இயக்கினார்கள். மழைக்காலங்களில் ஆறுகளில் நீர் வரத்து அதிகமாக இருக்கும். பல இடங்களில் ஆறுகள் மற்றும் குளங்கள் கரையில் சாலை அமைத்திருக்கிறார்கள். நீர் வரத்து அதிகமாக இருக்கும் பொழுது தண்ணீர் சாலையிலும் ஒடக்கூடும்.


ஆரூர் ரங்
மே 25, 2024 14:04

கூகிள் ஊழியர்களில் தெலுங்கர்கள் அதிகம். அவர்களுக்கே கூகிள் மேப் தண்ணீ காட்டி விட்டது .


Balasubramanian
மே 25, 2024 13:43

இது எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல தெரியாத ஊருக்கு வழி தேடிப் போனால், ஆறு குளத்தில் இறக்குவது , முட்டுச்சந்தில் சென்று முட்ட வைப்பது, அடுத்த தெருவில் இருக்கும் கோவிலுக்கு, ஆறு கிலோ மீட்டர் சுற்ற வைப்பது, தெரியாத பாலத்தில் ஏற்றி, அடுத்த கிராமத்தில் கொண்டு விடுவது - இது எல்லாம் கூகுளில் சகஜமப்பா


Google
மே 25, 2024 12:58

சுந்தர் பிச்சை ஆண்டு வருமானம் 1200 கோடி


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை