உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பக்தர்கள் வாகனம் மீது லாரி மோதியது: உ.பி.,யில் 6 பேர் பலி

பக்தர்கள் வாகனம் மீது லாரி மோதியது: உ.பி.,யில் 6 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: காசிப்பூரில் கும்பமேளாவுக்கு சென்று திரும்பிய பக்தர்கள் வாகனம் மீது லாரி மோதியல் 6 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா திருவிழா நடந்து வருகிறது. இந்நிலையில் கும்பமேளாவுக்கு சென்று திரும்பிய பக்தர்கள் வாகனத்தின் மீது கட்டுப்பாடின்றி வேகமாக வந்த லாரி மோதியது. இந்த விபத்து காசிப்பூரின் நந்த்கஞ்ச் காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள குஸ்மி கலா பகுதியில் இன்று மாலை நடந்தது. இந்த சம்பவத்தில் 6பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.விபத்து நடந்த நேரத்தில் பிக்அப் வேனில் சுமார் 20 பயணிகள் இருந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் சம்பவ இடத்தை விட்டு தப்பி ஓடி விட்டார்.இது பற்றி விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை