உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மெரினாவிற்கு வருவோரை நேர கட்டுப்பாடின்றி அனுமதித்தால் சட்டவிரோத செயல் அதிகரிக்கும்

மெரினாவிற்கு வருவோரை நேர கட்டுப்பாடின்றி அனுமதித்தால் சட்டவிரோத செயல் அதிகரிக்கும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை மெரினா கடற்கரைக்கு வரும் மக்களை, நேர கட்டுப்பாடின்றி அனுமதித்தால், சட்ட விரோத செயல்கள் நடக்க வாய்ப்புள்ளது என, உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.திருமங்கலத்தைச் சேர்ந்த ஆர்.கே.ஜலீல் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க, மெரினா கடற்கரைக்கு மக்கள் வருகின்றனர்.'அவர்களை இரவு 10:00 மணிக்கு மேல் கடற்கரையில் இருக்கக்கூடாது எனக்கூறி போலீசார் அப்புறப்படுத்துகின்றனர். கடற்கரைக்கு வருபவர்களை, இரவு 10:00 மணிக்கு மேலும் அனுமதிக்க வேண்டும்; அவர்களை துன்புறுத்தக்கூடாது. இது தொடர்பாக போலீசாருக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும்' என, கோரப்பட்டது.இம்மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, ''மெரினா கடற்கரைக்கு வரும் மக்களை, நேர கட்டுப்பாடு இன்றி அனுமதிக்க முடியாது. அவ்வாறு அனுமதித்தால், குற்றச் செயல்கள் நடக்க வாய்ப்புள்ளது; தற்கொலை சம்பவங்களும் அதிகரிக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறைய பேர் தற்கொலை செய்துள்ளனர்.“இரவு நேரங்களில், கடற்கரைக்கு வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, நேர கட்டுப்பாடு இல்லாமல் அனுமதி வழங்க முடியாது.''அத்துடன், இரவு நேரத்தில் மட்டும் வெளியே வரும் கடல் ஆமைகளுக்கும் பாதிப்பு ஏற்படும். பொது இடங்களில் கூடுவதற்கும், நேர கட்டுப்பாடுகள் விதிக்கவும், காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது,” என்றார்.இதை பதிவு செய்த நீதிபதிகள், தற்போது கோடை காலம் நிறைவடைந்து விட்ட நிலையில், இம்மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது.மனுதாரர் கோரிக்கை மனுவை பரிசீலித்து, காவல்துறை முடிவெடுக்கும்படி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

lana
ஜூன் 08, 2024 22:24

கடந்த இரு ஆண்டுகளாக மெரினாவில் தற்கொலை அதிகம். எனவே நீட் போலவே மெரினா க்கு செல்வதற்கு தடை விதிக்க வேண்டும்


Lion Drsekar
ஜூன் 08, 2024 11:52

பூங்காக்களில் பகல் நேரங்களில், இரயில் நிலைய மேம்பாபலன்களில் எந்த நேரமும் , பொது இடங்களில் , பேருந்து நிலையங்களில் பாக்கவே கண்கூசும் அளவுக்கு எல்லாமே அளவுக்கு மீறிசிறுவிட்டதே ? பள்ளிக்கூடங்களில் படிக்கும் சீருடை நீந்த குழந்தைகளின் பெற்றோர்கள் நேரில் பார்த்தல் மட்டுமே விடிவு பிறக்கும், வந்தே மாதரம்


சேவாஜீ
ஜூன் 08, 2024 09:26

கஞ்சா, மது போதையில் கலகம் செய்பவர்களை அங்கேயே புடிச்சு பின்னாடி போடுங்க. உளுத்துப்போன சட்டங்களை வெச்சுக்கிட்டு கைது, ஜாமின்ன்னு இழுத்தடிச்சா உருப்படாதவர்கள் கூட்டம் தான் அதிகமாகும்.


தமிழ்வேள்
ஜூன் 08, 2024 08:47

கடல்வழியாக போதைப்பொருள் கடத்தல் நடத்த உதவுவதற்காக போலீஸ் இப்படி ஒரு சொத்தை வாதத்தை முன் வைக்கிறது போல.... அரசியல் வாதிகளுக்கு அடிமை அல்லக்கை வேலைகளை மனம் விரும்பி ரசித்து ருசித்து செய்யும் போலீஸூக்கு பொது மக்களைப் பற்றி என்ன அக்கறை இருக்கப்போகிறது?


sridhar
ஜூன் 08, 2024 08:28

இந்த ஒரு விஷயத்தில் காவல் துறை சொல்வது சரி. இரவு ஒன்பது மணிக்கு மேல் rowdygal தொல்லை அங்கே அதிகம், பெண்களுக்கு ஆபத்து , உடமைகளை பாதுகாப்பு இல்லை …


Svs Yaadum oore
ஜூன் 08, 2024 07:45

கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறைய பேர் தற்கொலை செய்துள்ளனராம் .....திராவிடனுங்க ஆட்சியில் கொலை கொள்ளை பாலியல் குற்றம் தற்கொலை என்று இதுதான் அதிகரிக்கும் .....ஏற்கனவே தமிழ் நாடு முழுக்க கஞ்சா போதை என்று சட்ட விரோதம்தான்....இது இன்னும் அதிகரிக்குமாம் ....


prabakaran J
ஜூன் 08, 2024 07:25

so, we have to restrict the second show also right, The police give protection in an open place not a closed place. Next time file the case in the winter season then only we will get some solution in summer.


Varadachari Srivatsangan
ஜூன் 08, 2024 07:15

காவல் துறை சொன்னது சரிதான்.


Suresh Kesavan
ஜூன் 08, 2024 07:00

சரியான தீர்ப்புதான்


TIRUPUR MAYILVAGANAN SIVAKUMAR
ஜூன் 08, 2024 09:13

எல்லா விஷயங்களிலும் கட்டுப்பாடு கட்டாயம் தேவை, இது எல்லோருக்கும் பொருந்தும்,இல்லாவிட்டால் ஆள் ஆளுக்கு நாட்டாமை என்ற இண்டியா கூட்டணி போல ஆகிவிடும், ஜாக்கிரதை,


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி