உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர 28 அம்ச திட்டத்தை அறிவித்தது அமெரிக்கா

 ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர 28 அம்ச திட்டத்தை அறிவித்தது அமெரிக்கா

வாஷிங்டன்: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர, ஒரு விரிவான, 28 அம்ச சமாதான திட்ட முன்மொழிவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கு இடையேயான போர் துவங்கி நான்கு ஆண்டுகளை எட்ட உள்ளது. இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்த பல்வேறு முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், 28 அம்ச சமாதான திட்ட முன்மொழிவு ஒன்றை டிரம்ப் வெளியிட்டுள்ளார். இது உக்ரைன் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும், ரஷ்யாவிற்கு சாதகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த முன்மொழிவு அமெரிக்க, ரஷ்ய அதிகாரிகளின் கூட்டு முயற்சியின் கீழ் உருவாக்கப்பட்டு, தற்போது உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமாதான திட்ட முன்மொழிவில் உள்ள முக்கிய அம்சங்கள் : உக்ரைனின் இறையாண்மை உறுதிப்படுத்தப்படும் ரஷ்யா, உக்ரைன் மற்றும் ஐரோப்பா இடையே ஒரு விரிவான ஆக்கிரமிப்பு செய்யாத உடன்படிக்கை முடிக்கப்படும். கடந்த, 30 ஆண்டுகளாக உள்ள அனைத்து குழப்பங்களும் தீர்க்கப்பட்டதாக கருதப்படும் ரஷ்யா அண்டை நாடுகளை ஆக்கிரமிக்காது என்றும், நேட்டோ அமைப்பு மேலும் விரிவடையாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது உலகளாவிய பாதுகாப்பை உறுதி செய்யவும், ஒத்துழைப்பு மற்றும் எதிர்கால பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும், அனைத்து பாதுகாப்பு சிக்கல்களையும் தீர்க்க அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் ரஷ்யாவுக்கும், நேட்டோவுக்கும் இடையே பேச்சு நடைபெறும் உக்ரைனுக்கு நம்பகமான பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்கப்படும் உக்ரைன் ஆயுதப்படை வீரர்களின் அளவு 6 லட்சமாக குறைக்கப்படும் உக்ரைன் நேட்டோவில் சேர மாட்டோம் என்பதை அதன் அரசியலமைப்பில் சட்டமாக ஒப்புக்கொள்ளும். எதிர் காலத்தில் உக்ரைன் அனுமதிக்கப்படமாட்டாது என்ற ஒரு விதியை நேட்டோ அ தன் சட்டங்களில் சேர்க்க ஒப்புக்கொள்ளும் உக்ரைனில் நேட்டோ படைகளை நிறுத்த மாட்டோம் என நேட்டோ ஒப்புக்கொள்ளும் உக்ரைனை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு சக்திவாய்ந்த உலகளாவிய நடவடிக்கை எடுக்கப்படும் உள்கட்டமைப்பு மேம்பாடு, தாதுக்கள் மற்றும் இயற்கை வளங்களை பிரித்தெடுத்தல் உள்ளிட்ட இம்முயற்சிகளை விரைவுபடுத்த உலக வங்கி ஒரு சிறப்பு நிதியுதவி தொகுப்பை உருவாக்குதல் ரஷ்யா மீண்டும் உலக பொருளாதாரத்துடன் ஒருங்கிணைக்கப்படுவதுடன், ஜி - 8 குழுவில் சேர அழைக்கப்படும் இந்த ஒப்பந்தத்தின் அனைத்து விதிகளையும் உறுதிப்படுத்த ஒரு கூட்டு அமெரிக்க - ரஷ்ய பணிக்குழு அமை க்கப்படும் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின்படி உக்ரைன் அணுசக்தி அல்லாத நாடாக இருக்க ஒப்புக்கொள்கிறது நிலுவையில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க ஒரு குழு அமைக்கப்படும் எஞ்சியிருக்கும் அனைத்துக் கைதிகள் மற்றும் உடல்கள், குழந்தைகள் உட்பட அனைத்து பொதுமக்கள் தடுப்புக்காவலில் உள்ளவர்களும் மற்றும் பணயக்கைதிகளும் பரிமாறிக் கொள்ளப்படுவர் உக்ரைன் 100 நாட்களுக்குள் தேர்தலை நடத்தும் இந்த ஒப்பந்தம் சட்டப்பூர்வமானதாக இருக்கும். இதன் செயல்பாடுகள் அதிபர் டிரம்ப் தலைமையிலான சமாதானக் குழுவால் கண்காணிக்கப்படும் அனைத்துத் தரப்பினரும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட பின், இரு தரப்பினரும் ஒப்புக் கொள்ளப்பட்ட இடங்களுக்குப் படைகள் பின்வாங்கிய பின், போர்நிறுத்தம் நடை முறைப்படுத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை