உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  மனைவியுடன் தாஜ்மஹாலை ரசித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப் மகன்

 மனைவியுடன் தாஜ்மஹாலை ரசித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப் மகன்

ஆக்ரா: டில்லி வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகனும், தொழிலதிபருமான டொனால்டு டிரம்ப் ஜூனியர், 47 தன் மனைவி யுடன் நேற்று ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலை சுற்றிப் பார்த்தார். ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில், அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர்களான வம்சி கதிராஜு மற்றும் நேத்ரா மன்தேனா ஜோடியின் திருமண விழா இன்று துவங்கி 24ம் தேதி வரை நடக்க உள்ளது. 'டெஸ்டினேஷன் வெட்டிங்' எனப்படும், உலக பாரம்பரியம் மிக்க இடங்கள் மற்றும் பிரபலமான சுற்றுலா தலங்களில் இந்த திருமணம் நடக்கிறது. இந்த திருமண விழாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மகன் டிரம்ப் ஜூனியர், உலக புகழ்பெற்ற பாடகர்களான ஜெனிபர் லோபஸ், ஜஸ்டின் பைபர் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் பங்கேற்கின்றனர். இதற்காக மத்திய மற்றும் மாநில போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் உதய்பூர் கொண்டு வரப்பட்டுள்ளது. திருமணம் நடக்க உள்ள ஜக்மந்திர் அரண்மனை, பிரபலங்கள் தங்கி உள்ள லீலா பேலஸ் ஹோட்டல் ஆகியவற்றுக்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. உதய்ப்பூர் செல்வதற்கு முன் டிரம்பின் மகன் டிரம்ப் ஜூனியர், உ.பி.,யின் ஆக்ராவுக்கு வந்தார். அங்கு உள்ள ஓபராய் அமர் விலாஸ் ஆடம்பர ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கி, தாஜ் மஹாலை தன் மனைவி வானெசா டிரம்புடன் சுற்றி பார்த்தார். தாஜ்மஹால் முன் அமைக்கப்பட்டிருக்கும் டயானா பெஞ்ச் மீது ஜோடியாக அமர்ந்து அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை