உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உஸ்பெகிஸ்தான் பெண் மர்ம சாவு நட்சத்திர ஹோட்டலில் அதிர்ச்சி

உஸ்பெகிஸ்தான் பெண் மர்ம சாவு நட்சத்திர ஹோட்டலில் அதிர்ச்சி

பெங்களூரு: பெங்களூரு நட்சத்திர ஹோட்டலில், உஸ்பெகிஸ்தான் பெண், மர்மமான முறையில் இறந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மத்திய ஆசியாவின் உஸ்பெகிஸ்தானை சேர்ந்தவர் ஜரீனா, 37. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, சுற்றுலா விசாவில் பெங்களூரு வந்தார். பி.டி.ஏ., தலைமை அலுவலகம் அருகே உள்ள, நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார். நேற்று முன்தினம் மாலையில் இருந்து, ஜரீனா வெளியே வரவே இல்லை; இரவு உணவும் ஆர்டர் செய்யவில்லை.இதனால் சந்தேகம் அடைந்த ஹோட்டல் ஊழியர்கள், நேற்று காலை ஜரீனா தங்கி இருந்த அறை கதவை தட்டினர். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. இதனால் இன்னொரு சாவியை எடுத்து வந்து, அறையை திறந்து உள்ளே சென்றனர். படுக்கை அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் காயங்களும் இருந்தன.மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் சேகர், சேஷாத்திரிபுரம் போலீசார், அங்கு சென்று உடலை பார்வையிட்டனர். ஜரீனாவை மூச்சு திணறடித்து மர்ம நபர்கள் கொன்று இருக்கலாம் என்று, சந்தேகம் எழுந்து உள்ளது.ஹோட்டலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ