உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடி டீ குடித்ததால் திடீர் பிரபலமான வாரணாசி டீக்கடை

மோடி டீ குடித்ததால் திடீர் பிரபலமான வாரணாசி டீக்கடை

வாரணாசி: கடந்த 2022ம் ஆண்டு வாரணாசி வந்தபோது பிரதமர் மோடி, டீ அருந்திய கடை பிரபலமாகி உள்ளது. கடையை பார்ப்பதற்கு என்றே ஏராளமானோர் வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3vctdwap&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உ.பி., மாநிலத்தில் உள்ள வாரணாசியில் அஸ்சி கார்ட் பகுதியில் உள்ள டீக்கடை தான் ' பப்பு சாய் கடை' இந்த டீக்கடையை மூன்றாவது தலைமுறையாக தாத்தா, அப்பா தற்போது பேரன் சதீஷ் நடத்தி வருகிறார். 85 வருடங்களாக நடத்தப்பட்டு வரும் இந்த டீக்கடையில் ஒரு நாளைக்கு 200 முதல் 500 நபர்கள் வரை வந்து டீ அருந்திவிட்டு செல்கின்றனர். 2022 ல் வாரணாசி வந்த பிரதமர் முதல்முறையாக இந்த டீக்கடைக்கு வந்து ஒரே நேரத்தில் மூன்று டீ அருந்தினார்.இந்த கடைக்கு பெயர் பலகை என ஒன்றும் கிடையாது. இவரின் அப்பா பெயர் தான் பப்பு அவரால் தான் இக்கடை புகழ்பெற்றது. இவரது கடையில் வாரணாசியில் கிடைக்கும் மற்ற டீயை விட லெமன் டீ சிறப்புமிக்கது. பாய்லர் மூலம் சுடுதண்ணீர் கொதிக்க வைத்து டீத்தூள் மற்றும் புதினா இலைகள், செரிமானத்திற்கு உண்டான பொருட்கள் அனைத்தும் சேர்க்கப்பட்டு டீ தயார் செய்து வழங்கப்படுகிறது. பிரதமர் விரும்பி அருந்திய டீக்கடை என்பதால் சுற்றுலா பயணிகளும் பார்ப்பதற்காகவே கடைக்கு வந்து. டீ அருந்திவிட்டு நன்றாக இருப்பதாக கூறிவிட்டு செல்கின்றனர்.பாய்லர் பால் டீ யும் தயாரிக்கப்பட்டு கொடுக்கப்படுகிறது. எந்த டீயாக இருந்தாலும் விலை 15 ரூபாய் என்று நிர்ணயம் செய்துள்ளனர். எப்பகுதியில் இருந்தும் பப்பு சாய் கடைக்கு செல்ல வேண்டும் என்றால் ஆட்டோக்காரர்கள் ரிக்ஷா என யாரிடம் சொன்னாலும் போதும் கடைக்கு அழைத்து வந்து விடுகின்றனர். அத்தனை புகழ்பெற்ற கடையாக வாரணாசி முழுவதும் பரவி உள்ளது. ஒருமுறை இவர் தந்தையை டில்லிக்கு அழைத்து பிரதமரே பாராட்டி உள்ளார்.நீங்களும் காசிக்கு ஒருமுறை வந்தால் இங்கு வந்து, தற்போது டீ மாஸ்டராக, மேலாளராக, முதலாளியாக கேசியராக என பல்வேறு பரிமாணங்களில் அனைத்து பணிகளும் ஒருவரே கவனித்துக் கொள்ளும் சதீஷை பார்த்து டீ அருந்திவிட்டு வாழ்த்தி விட்டுச் செல்லலாம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Ramesh Sargam
மே 30, 2024 20:24

ராகுல் காந்தி டீ குடித்த கடைகள், உணவு அருந்தும் கடைகள் எல்லாம் வியாபாரம் இல்லாமல் மூடிவிட்டார்களாம்.


Syed ghouse basha
மே 30, 2024 18:38

மோடி சுட்ட வடையே பேமஸ் ஆகும்போது அவர் டீ குடிச்ச கடை பேமஸ் ஆனதிலே என்ன பிரமாதம்?


vijay
மே 30, 2024 20:30

பப்பு சுட்ட ஊசிப்போன வடைகள், சுட்டுக்கொண்டிருக்கும், எதிர்காலத்தில் சுடப்போகும் வடைகளை சாப்பிட்டு உன்போன்றவர்கள் சந்தோஷமடையலாம்


hari
மே 30, 2024 20:52

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.... என்ன பாய்... புரியுதா....


Rvelmurugan
மே 30, 2024 23:27

தஙகம் கடத்தி சம்பாதிக்க முடியல யா


Bharathi
மே 30, 2024 18:08

If I am aware of this news at least I could have got a better tea.


rama adhavan
மே 30, 2024 20:42

ஏன் ஒரிஜினல் பப்பு உபயோகிதவை எதுவும் பிரபலமே ஆவதில்லை? கை ராசியோ?


Bharathi
மே 30, 2024 18:06

Just had a visit with lot of expectations but nothing there and no any developments. Very much crowded.. Unclean.. Narrow roads adulterated materials... Unhygienic food.. Hell of traffic so and so I was very surprised being PM constitution such a poor infrastructure


Duruvesan
மே 30, 2024 19:43

விடுங்க மூர்க்ஸ் நாம டாஸ்மாக் அடிமையாவே இருப்போம்


ஆரூர் ரங்
மே 30, 2024 18:03

பப்புவுக்கு பெருமை.


கத்தரிக்காய் வியாபாரி
மே 30, 2024 17:48

பப்புக்கு அடுத்து காபி கடைல செல்பி பார்சல்


Vathsan
மே 30, 2024 17:30

டீ க்கு காசு கொடுத்தாரா இல்லை எப்போவும் போல மாநில அரசை கட்ட சொன்னாரா?


Duruvesan
மே 30, 2024 19:44

எப்படி விடியல் குடும்பத்தோட அரசாங்க செலவுல துபாய் போயி லூலூ மால் கொண்டாந்த மாதிரியா


Selvakumar Krishna
மே 30, 2024 17:26

எதுக்குயா காசு கொடுத்து சூனியம் வைத்துக்கணும் ? ரெண்டு டீ விக்கிற ஆளுங்களோட வியாபார பேரத்தில் நாமே ஏன் தலையிடணும்


Selvakumar Krishna
மே 30, 2024 17:26

எதுக்குயா காசு கொடுத்து சூனியம் வைத்துக்கணும் ? ரெண்டு டீ விக்கிற ஆளுங்களோட வியாபார பேரத்தில் நாமே ஏன் தலையிடணும்


J.V. Iyer
மே 30, 2024 17:14

அருமை.. நவீனதேசப்பிதா மோடிஜியினால் உலக அரங்கில் பாரத நாடே பெருமை அடையும்போது, அவர் குடித்த டீயினால் இந்த கடை பெருமை அடைந்ததில் வியப்பில்லை அல்லவா?


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ