உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சொந்த தொகுதியில் ராகுல் "விசிட்"

சொந்த தொகுதியில் ராகுல் "விசிட்"

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் இரு வாரங்களில் யானை தாக்கி மூவர் பலியானதால், தனது தொகுதிக்கு காங்., எம்.பி ராகுல் சென்றார். உயிரிழந்த, 3 பேரின் குடும்பத்தினரை ராகுல் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.நீலகிரி மாவட்டம், பந்தலுாரை ஒட்டி கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த மாதம், 31ம் தேதி லட்சுமணன்; கடந்த, 10ம் தேதி அஜீஸ்; யானை தாக்கி உயிரிழந்த நிலையில், 16- ம் தேதி, பால்,42, என்பவர் யானை தாக்கியதில் உயிரிழந்தார். இரு வாரங்களில் யானை தாக்கி மூவர் பலியானதால், பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, கடையடைப்பு போராட்டம் நடந்தது.இதனால் தனது பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையை தற்காலிகமாக நிறுத்தி விட்டு, ராகுல், வயநாட்டிற்கு விரைந்தார். பின்னர் அவர் வயநாட்டில் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஒவ்வொருவர் வீட்டுக்கும் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது சில இடங்களில் ராகுலின் வாகனத்தை மறித்த பொதுமக்கள் தங்களது புகார்களை கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

இளைஞர்களுக்கு 'இரட்டை அடி'

இது குறித்து ராகுல் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: டபுள் இன்ஜின் ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் பா.ஜ., ஆட்சியில் இளைஞர்களுக்கு இரட்டை அடி விழுகிறது. உ.பி.யில் மூன்றில் ஒரு இளைஞர் வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், பட்டதாரிகள், முதுநிலைப் பட்டதாரிகள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் குறைந்த பட்சத் தகுதியுள்ள பதவிகளுக்குக் கூட வரிசையில் நிற்கின்றனர். ராணுவத்தில் இருந்து ரயில்வே மற்றும் போலீசார் வரை ஆட்சேர்ப்புக்காக பல ஆண்டுகளாக காத்திருந்த லட்சக்கணக்கான மாணவர்கள் வயது முதிர்ந்தவர்களாக மாறியுள்ளனர். இதையெல்லாம் கண்டு வேதனையடைந்த அவர்கள், தனது கோரிக்கைகளை முன்வைத்து வீதியில் இறங்கியபோது, ​​போலீசாரிடம் இருந்து தடியடிகளைப் பெறுகிறார். ஒரு மாணவனுக்கு, வேலை என்பது வெறும் வருமான ஆதாரமாக இல்லாமல், அவனது குடும்பத்தின் வாழ்க்கையை மாற்றும் கனவாகவும் இருக்கிறது. இந்தக் கனவு தகர்க்கப்படுவதால், ஒட்டுமொத்த குடும்பத்தின் நம்பிக்கையும் சிதறடிக்கப்படுகிறது. காங்கிரஸின் கொள்கைகள் இளைஞர்களின் கனவுகளுக்கு நீதி வழங்கும். அவர்களின் தவத்தை வீண் போக விடமாட்டோம். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை