உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விரலை உடைச்சுடுவேன்: மிரட்டல் விடுத்து திரிணமுல் அமைச்சர் சர்ச்சை

விரலை உடைச்சுடுவேன்: மிரட்டல் விடுத்து திரிணமுல் அமைச்சர் சர்ச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: '' முதல்வர் மம்தாவை நோக்கி கைநீட்டி பேசுபவர்களின் விரல்கள் உடைக்கப்படும்'' என திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் உதயன் குஹாவின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது.மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி மருத்துவக் கல்லூரியில் பணியில் இருந்தபோது முதுகலை பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்தும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் நாடு தழுவிய அளவில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.இந்த நிலையில், அம்மாநில அமைச்சர் உதயன் குஹா ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது: கோல்கட்டா டாக்டர் சம்பவத்தில் முதல்வர் மம்தாவை நோக்கி கைநீட்டி பேசுபவர்களும், சமூக வலைதளங்களில் அவரை விமர்சித்துப் பேசுபவர்களும் அடையாளம் காணப்பட்டு அவர்களின் விரல்கள் உடைக்கப்படும். இல்லையெனில் இதுபோன்ற நபர்கள் மேற்குவங்கத்தை வங்கதேசமாக மாற்றிவிடுவார்கள். மருத்துவமனை தாக்கப்பட்ட சம்பவம் நடந்தபிறகு கூட, போலீஸார் யார் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. வங்கதேசத்தில் நடந்தது போன்ற சூழலை அரசு ஒருபோதும் அனுமதிக்காது. இவ்வாறு அவர் சர்ச்சையாக பேசியிருந்தார்.உதயன் குஹாவின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜ., 'திரிணமுல் காங்கிரசின் 'தலிபான்' மனநிலையை இது காட்டுகிறது,' என்று விமர்சித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Barakat Ali
ஆக 19, 2024 21:31

இதில் சஞ்சய் ராய் மட்டுமே ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை ........ மற்றவர்களைக் காப்பாற்றி சஞ்சய் ராயை பலிகொடுக்க விரும்புகிறது ஆளுங்கட்சி ...... அந்த மற்றவர்கள் வங்கதேசத்திலிருந்து ஊடுருவியவர்களாக இருக்கலாம் ..... அல்லது த்ருணாமுல்க்கு மிகவும் வேண்டியவர்களாக இருக்கலாம் ...


sankaranarayanan
ஆக 19, 2024 20:30

இவன் அடுத்தவர்கள் விரலை உடைக்கும் வார்த்தையை மற்றவர்கள் கை என்ன பூவா பறித்துக்கொண்டிருக்கும் பார்க்கலாமே


Ramesh Sargam
ஆக 19, 2024 20:07

இவனை குண்டர் சட்டத்தின் கீழ் பிடித்து சிறையில் அடைத்து அவன் விரலை உடைக்கவேண்டும்.


konanki
ஆக 19, 2024 19:21

"ஏய் அண்ணாச்சிய பார்த்து கை நீட்டி பேசிறியா"? சாமி பட டைலாக் டி எஸ் பி சாமி யை பார்த்து அண்ணாச்சி யின் அல்லக்கை


konanki
ஆக 19, 2024 19:16

திரிணமூலின் R S பாரதி. தயாநிதி மாறன்


R S BALA
ஆக 19, 2024 17:39

அட.....


என்றும் இந்தியன்
ஆக 19, 2024 17:24

தலையை வெட்டி விடுவேன் என்றால் கைது செய்யப்படுவார் விரலை உடைத்து விடுவேன் என்றால் கிடையாது ஆகவே தான் இந்த வார்த்தையாடல் உண்மை என்னவென்றால் கொன்றுவிடுவேன்


கோவிந்தராசு
ஆக 19, 2024 17:19

இவனுக பண்ணும் சேட்டய பாத்தா இலங்கை வங்க தேசம் பேல் வந்துடு மேனு தோணுது


தமிழன்
ஆக 19, 2024 17:15

மத்திய அரசு செயல்படுகிறதா?


lana
ஆக 20, 2024 05:57

hi கோர்ட் குற்றவாளி ன்னு சொன்னாலும் அவனுக்கு அமைச்சர் பதவி கொடுக்க சொல்லி கவர்னர் ஏ விரட்ட முடியும் எங்க உச்சா மை லார்ட் . ஆட்சி எல்லாம் கலைத்தால் அவ்வளவு தான் எங்க லார்ட் கோவம் கொண்ட வேங்கை ஆகி விடுவார். நாடு முன்னேற நல்ல லார்ட் வேண்டும்


மேலும் செய்திகள்





புதிய வீடியோ