உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி.,ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற போகும் வேட்பாளர் யார்?

உ.பி.,ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற போகும் வேட்பாளர் யார்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உ.பி.,யில் காலியாக உள்ள 10 ராஜ்யசபா இடங்களுக்கு 11 பேர் போட்டியிடுவதால் தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது. உ.பி., மாநிலத்தில் வரும் 27 ம் தேதி ராஜ்யசபாவுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. 10 பேர் வரை தேர்வு செய்ய உள்ள நிலையில் போட்டிக்கான களத்தில் தற்போது வரை 11 பேர் உள்ளனர். மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பலத்தின் படி ஆளும் பா.ஜ., சார்பில் 252 எம்.எல்.ஏக்களும், சமஜ்வாதி கட்சி சார்பில் 108 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். கட்சிகளின் நிலவரப்படி ஒரு ராஜ்யசபா உறுப்பினரை தேர்வு செய்ய 37 ஓட்டுக்கள் வரை தேவைப்படுகிறது. இதன்படி பா.ஜ., சார்பில் 7 பேரும் சமஜ்வாதி சார்பில் 3 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர். இருப்பினும் பா.ஜ., சார்பில் 8 வது நபர் ஒருவர் போட்டியிடுகிறார். இதனால் வெற்றி பெறுபவர் யார் என்ற கடும் போட்டி நிலவுகிறது. இது குறித்து தேர்தல் அதிகாரி பிரிஜ்பூஷன் பாண்டே கூறியதாவது: ஒரு வேட்பாளருக்கு வெற்றியை பதிவு செய்ய 37 வாக்குகள் தேவைப்படும். தற்போது நிலவரப்படி சட்டசபையில் 399 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். சமஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இர்பான் சோலங்கி, ரமாகாந்த் யாதவ் மற்றும் சுஹேல்தேவ் , எஸ்பிஎஸ்பி (பாரதிய சமாஜ்கட்சி) எம்.எல்.ஏ., அப்பாஸ் அன்சாரி ஆகியோர் சிறையில் உள்ளனர். அவர்கள் தேர்தலில் வாக்கு அளிக்க முடியுமா என்பது நீதிமன்றமும் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியும் முடிவு செய்யும் என்றார்.இதனிடையே எஸ்பிஎஸ்பி மற்றும் ஆர்எல்டி எம்.எல்.ஏ.,க்கள் சமஜ்வாதி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பர் என நம்புவதாக சமஜ்வாதி கட்சி தலைமை கொறாடா மனோஜ் பாண்டே தெரிவித்தார். அதே நேரத்தில் மேற்கண்ட எஸ்பிஎஸ்பி மற்றும் ஆர்எல்டி ஆகிய இரண்டும் பா.ஜ., தலைமையிலான என்டிஏ கூட்டணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை