உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குற்ற பின்னணி வேட்பாளர் ஏன்? அரசியல் கட்சிகள் விளக்கம்

குற்ற பின்னணி வேட்பாளர் ஏன்? அரசியல் கட்சிகள் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி, ஜன. 18-மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்களில் குற்ற வழக்குகள் உடையவர்களை வேட்பாளர்களாக தேர்ந்தெடுத்ததற்கு, அவர்களின் நிர்வாக திறன், பொது சேவையில் உள்ள அர்ப்பணிப்பே காரணம் என, அரசியல் கட்சிகள் சாக்கு தெரிவித்துள்ளன.மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டசபைகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்தது. மஹாராஷ்டிராவில் பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணியும், ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணியும் வெற்றி பெற்றன.குற்ற வழக்குகள் உள்ளவர்களை வேட்பாளர்களாக நிறுத்தினால், அவர்களை தேர்வு செய்ததற்கான காரணத்தை கட்சித் தலைமை தெரிவிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல்களில் தாக்கல் செய்யப்பட்ட 1,286 வேட்பாளர்களின் பார்ம் சி7 விண்ணப்பத்தை, ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் ஆய்வு செய்தது. அதன் விபரம்:மஹாராஷ்டிராவில் போட்டியிட்ட 1,052 வேட்பாளர்களில், 503 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 32 சதவீதம் பேர் மீது தீவிர குற்றச்சாட்டுகள் உள்ளன.ஜார்க்கண்டில் போட்டியிட்ட 234 பேரில், 105 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவற்றில், 35 சதவீதம் தீவிரமான குற்றச்சாட்டுகள்.வேட்பாளர்களின் நிர்வாக திறன், சமூக சேவையில் உள்ள அர்ப்பணிப்பு, மக்கள் மத்தியில் செல்வாக்கு, வெற்றி பெறும் வாய்ப்புள்ளவர் போன்றவை தேர்வுக்கான காரணமாக சொல்லப்பட்டுள்ளன.மஹாராஷ்டிராவில் தேசியவாத காங்., - சரத் பவார் பிரிவு, ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் குற்ற வழக்குள்ள வேட்பாளர்களின் தேர்வுக்கு அக்கட்சிகள் விளக்கம் அளிக்கவில்லை.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Karthik
ஜன 18, 2025 19:47

பேசாம நீதிமன்றம் என்ற பெயரை அநீதி மன்றம் அல்லது அரசியல்வாதிக்கான நீதிமன்றம் என்று மாற்றிவிடுவதே பொருத்தமாக இருக்கும்.


venkatan
ஜன 18, 2025 16:00

குற்றப்பின்னணியையும் ,குற்றத்தையும் ஒரு தகுதியாகவே நிர்ணயம் செய்துவிடலாம். நாட்டில் எந்த வேலைகொடுப்போரும் குற்றவாளிகளை ப் பணியில் அமர்த்துவது இல்லை. வாழ்க இந்திய ஜனநாயகம்...


Barakat Ali
ஜன 18, 2025 08:45

குற்றப்பின்னணி உடையவர்களை ஊக்குவிக்கும் அரசியல் சட்டமே இருக்கிறது ..... அம்பேத்கருக்கு நன்றி .....


Dharmavaan
ஜன 18, 2025 08:29

கையாலாகாத சுதந்திரம் என்றால் பெயரில் பல ஆண்டு கணக்கில் வழக்கை இழுக்கும் நீதிகளே முழு காரணம் வேறு யாருமல்ல.நீதித்துறை ஜனாதிபதி கட்டுப்பாட்டில் வர வேண்டும் கோலீஜியும் நீக்கப்பட வேண்டும்


Kasimani Baskaran
ஜன 18, 2025 07:50

கையாலாகாத நீதித்துறையை வைத்துக்கொண்டு என்ன வேண்டுமானாலும் கம்பி கட்டலாம். யாரும் கேள்வி கேட்க முடியாது.


K V Ramadoss
ஜன 18, 2025 02:38

குற்றப்பின்னணி உள்ளவர்களால் ஏழைகளின் ஓட்டுக்களை எளிதாக பெறமுடியும். அவர்கள்தான் ஏழைகளின் நடுவில் வாழ்கிறார்கள். அவர்களை பயமுறுத்தியோ அல்லது பணம் கொடுத்தோ எளிதாக அவர்களை மொத்தமாக ஓட்டுப்போட வைக்க முடியும். மொத்தத்தில் பொறுக்கிகளுக்கு ஏழைகள் மத்தியில் ஒரு மவுஸு உண்டு. நல்லவர்கள் அங்கு எடுபடுவதில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை