மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
1 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
1 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
1 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
2 hour(s) ago
சித்ரதுர்கா: மகனை கொலை செய்த காரணத்தை, போலீசார் முன்பு சுசனா கூற மறுத்து வருகிறார்.பெங்களூரில் உள்ள பிரபல நிறுவனத்தில், தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றியவர் சுசனா சேட், 39. இவரது மகன் சின்மய் ரமணன், 4. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பெற்ற மகன் என்றும் பாராமல் சின்மயை, கடந்த 7 ம் தேதி கோவாவில் வைத்து சுசனா கொலை செய்தார்.உடலை சூட்கேசில் அடைத்து, வாடகை காரில் பெங்களூரு வந்தார். கோவா போலீசார் கொடுத்த தகவலின்படி, சித்ரதுர்கா ஐமங்களா போலீசார், சுசனாவை கைது செய்து, கோவா போலீசில் ஒப்படைத்தனர். அவரை காவலில் எடுத்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.விசாரணையில், அளவுக்கு அதிகமாக இருமல் மருந்தை சின்மய்க்கு கொடுத்ததும், இதனால் அவர் மயங்கியதும் தெரிந்தது. இதன்பின் தலையணையால் முகத்தை அழுத்தி கொன்றதும் தெரிந்தது. உடலை பெங்களூரு எடுத்து வந்து, ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வீச, திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்து உள்ளது.கணவர் வெங்கட்ரமணாவுடன், மகன் பேசுவதை தவிர்க்கவே கொலை செய்தார் என்ற கோணத்தில், போலீசார் விசாரிக்கின்றனர். ஆனால் கொலைக்கான உண்மையான காரணத்தை, சுசனா கூற மறுக்கிறார். இதற்கிடையில் கொலை நடந்த ஹோட்டல் அறைக்கு, சுசனாவை நேற்று கோவா போலீசார் அழைத்து சென்று விசாரித்தனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago