உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் தேர்வை ரத்து செய்யாதது ஏன்? மத்திய அமைச்சர் விளக்கம்

நீட் தேர்வை ரத்து செய்யாதது ஏன்? மத்திய அமைச்சர் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்தால், சரியான முறையில் படித்து வெற்றி பெற்ற லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் '', என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.மே 5ல் நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாகவும், குளறுபடி ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து தோ்வை ரத்து செய்ய வேண்டும் என எழுந்த கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது.இது தொடர்பாக மத்திய கல்வித்துறை தர்மேந்திர பிரதான் கூறியதாவது: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு என்பது சில மாணவர்களை மட்டும் தான் பாதித்தது. ஆனால் 2004 மற்றும் 2015ம் ஆண்டுகளில் வினாத்தாள் பெரிய அளவில் கசிந்ததால், அப்போது நடந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. தற்போது தேர்வை ரத்து செய்தால், சரியான முறையில் படித்து, தேர்வு எழுதி வெற்றி பெற்ற லட்சக்கணக்கான மாணவர்களை பாதிக்கும். இதனால், தேர்வை ரத்து செய்யவில்லை. இந்தத் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவே இறுதியான ஒன்றாகும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Shankar
ஜூன் 22, 2024 14:44

நீட் தேர்வில் தப்பு செய்தவர்கள் யாரோடு தொடர்பு வைத்திருந்தார்கள் எங்கே அது போய் முடிந்தது என உங்களால் கண்டுபிடிக்க முடியாதது பிஜேபி அரசு இதில் தோல்வி அடைந்து விட்டது என்று அர்த்தம் இது போன்ற கையாளாகாத அரசுகள் எல்லாம் மக்களுக்கு தேவையில்லை


Indian
ஜூன் 22, 2024 14:03

வினா தாளை கசியவிட்டு , வட மாநில மாணவர்கள் அதிகம் பேரை டாக்டர் ஆக்குங்கள் ..


S BASKAR
ஜூன் 22, 2024 12:55

அப்போ நெட்டை ரத்து செய்ததால் பாதிக்க பட மாட்டாங்களா...... ஒன்னும் புரியல


Suppan
ஜூன் 22, 2024 13:39

அது பரீட்சை ஆரம்பமாகும் முன்பே ரத்து செய்யப்பட்டது .


ஆரூர் ரங்
ஜூன் 22, 2024 12:19

முன்பும் தமக்கு பதிலாக ப்ராக்ஸி ஆட்களை போட்டி தேர்வுகளை எழுத வைத்து பலர் பாஸ் செய்தததுண்டு. அதற்காக எல்லா மாணவர்களையும் மீண்டும் தேர்வெழுத வைப்பது நியாயமல்ல.


கனோஜ் ஆங்ரே
ஜூன் 22, 2024 13:08

இதுனாலதான்... நீட்டும் வேண்டாம், நெட்டும் வேண்டாம்..னு சொல்றோம். உங்க ஆளுங்களுக்கு எரிச்சல்...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை