உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முழுமையான தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கேள்வி

முழுமையான தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடாதது ஏன்?: உச்சநீதிமன்றம் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: முழுமையான தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடாதது ஏன்? என எஸ்.பி.ஐ.,க்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தேர்தல் பத்திரங்கள் வாயிலாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியவர்களின் முழு விபரங்களை வெளியிடும்படி எஸ்.பி.ஐ., எனப்படும், பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவில், பத்திரங்களை வாங்கியவரின் பெயர், தொகை, வாங்கப்பட்ட தேதி, எந்த கட்சி அதை பணமாக்கியது உள்ளிட்ட விபரங்களை கடந்த 12ம் தேதிக்குள் அளிக்கும்படி உத்தரவில் குறிப்பிட்டு இருந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6v5qck02&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த விபரங்களை, தலைமை தேர்தல் ஆணையம், மார்ச் 15ம் தேதிக்குள் தங்கள் இணையதளத்தில் வெளியிடவும் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, தேர்தல் பத்திர விபரங்களை தலைமை தேர்தல் கமிஷனிடம் எஸ்.பி.ஐ., சமர்ப்பித்தது. அந்த விபரங்கள் அனைத்தும், தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில், கடந்த 11ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் திருத்தம் கோரி, தலைமை தேர்தல் கமிஷன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

எஸ்.பி.ஐ.,க்கு என்ன தயக்கம்?

இந்த மனு, இன்று (மார்ச் 18) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது: முழுமையான தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடாதது ஏன்?. முழுமையான விவரங்களை வெளியிட வேண்டும் என தெளிவாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீரப்பை நடைமுறைப்படுத்துவதில் எஸ்.பி.ஐ.,க்கு என்ன தயக்கம்?. அரசியல் கட்சிகள் வழங்கிய விவரங்களை சீலிட்ட கவரில் சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பாக எஸ்.பி.ஐ வங்கி அளித்துள்ள விளக்கம் திருப்தி அளிக்கவில்லை. தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் எஸ்.பி.ஐ., வங்கி நேர்மையாக இருக்க வேண்டும். தீர்ப்பை செயல்படுத்துவதில் எஸ்.பி.ஐ., வங்கியின் அணுகுமுறை நியாயமானதாக இல்லை. தேர்தல் பத்திர விவரங்களை எந்த பார்மெட்டில் வங்கி பாதுகாத்து வைத்துள்ளது?. இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

உத்தரவு

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிட்டு மார்ச் 21க்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என எஸ்.பி.ஐ.,க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

R Kay
மார் 19, 2024 00:25

நீங்கள் என்ன கதறினாலும் மக்கள் பாஜக பக்கமே எந்த விவரங்களும் எங்களுக்கு தேவையில்லை. யார் ஊழலில் திளைத்தார்கள், யார் நல்லாட்சி கொடுத்தார்கள் என்பது மட்டும் எங்களுக்கு போதும்.


முருகன்
மார் 18, 2024 22:12

வெளியிட்டால் உத்தமர் வேஷம் போடும் பலர் நிலை பரிதாபமாக மாறிவிடும் அல்லவா


கபிலன்
மார் 18, 2024 20:37

எங்க நேர்மையை சந்தேகிப்பதா? தூக்கிருவோம்.


Mariadoss E
மார் 18, 2024 19:50

இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டினால் GST உண்டு, PF வட்டிக்கு வருமான வரி உண்டு அதே போல் அரசியல் வசூல் இதற்கும் வரி போட வேண்டும்.....


GMM
மார் 18, 2024 18:55

கட்சி தேர்தல் பத்திரத்தை பணமாக மாற்றிய விவரம் அந்தந்த கட்சியின் வங்கி கணக்கில் ( பொது துறை, தனியார்) வரவு வைக்கும். எல்லா கட்சியும் SBI யில் கணக்கு இருக்காது? கட்சிகள் தன் இணைய தளத்தில் கட்சியின் வங்கி விவரம் வெளியிட வில்லை. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கு பல கிளைகளில் தொடங்க முடியும். வருமான வரி விலக்கு உண்டு.? ஆதார் இருக்காது? PAN தேவையில்லை. விற்பனை விவரத்தை sbi கொடுத்து விட்டது. கட்சியும், அதன் வங்கியும் தான் பணம் பெற்ற விவரம் கொடுக்க முடியும். SBI க்கு கேட்கும் அதிகாரம் இருக்காது. உச்ச நீதிமன்றம் அனைத்து கட்சிக்கும், வங்கிக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.


தாமரை மலர்கிறது
மார் 18, 2024 18:55

சுப்ரிம் கோர்ட் ஆற்றில் மூன்றடிக்கு மேல் மணல் எடுக்க, காடுகளை மைனிங் செய்ய, மலைகளை உடைக்க தடை போட்டுள்ளது. ஆனால் அதன் படி செயல்பட்டால், யாரும் வீடுகட்ட முடியாது, யாரும் மேசை நாற்காலி வாங்கமுடியாது. தொழிற்சாலைகள் அமைக்க முடியாது. நாடு பொருளாதாரத்தில் தேய்ந்து ஆப்பிரிக்கா போன்று ஏழை நாடாகிவிடும். யாருக்கும் வேலைவாய்ப்பின்றி பாசிபட்டினியால் மக்கள் மடிவார்கள். சுப்ரிம் கோர்ட் சுத்தத்தங்கம். அதில் காப்பர் கலந்தால் தான், நகை செய்யமுடியும். இல்லாவிடில் அது வேஸ்ட். அது போன்று சில சமயங்களில் முதலீட்டாளர்களை இந்தியாவில் தக்கவைத்துக்கொள்ள, அவர்கள் யாருக்கு நிதி கொடுத்தார்கள் என்ற ரகசியத்தை பேணாவிடில், அரசியல் காழ்புணர்ச்சிக்கு பயந்து அவர்கள் வேறு நாட்டிற்கு ஓடிவிடுவார்கள். முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க, சுப்ரிம் கோர்ட்டின் பேச்சை எஸ் பி ஐ சரியாக கேட்காமல் தான் செயல்படும். சுப்ரிம் கோர்ட் கேட்டு கேட்டு பார்த்து, ஒரு கட்டத்தில் அதுவே புரிந்துகொள்ளும்.


M S RAGHUNATHAN
மார் 18, 2024 18:46

If I were SBI, I would have refused to part with details of Electoral Bonds. The act gives absolute secrecy to the donors and as Nodal Bank has to abide by the parliamentary direction given in the Act. If SC initiates contempt action against me, I will file a case against SC for forcing me to act against the sovereign guarantee given by the Parliament. You can take action, if I sold any bonds after the judgement of SC. The SC cannot invalidate and hold that the transactions under the prevalent law at the time as illegal. It can not impose it retrospectively. It is anarchism and abject judicial activism.


கௌதமன்
மார் 18, 2024 16:51

ஊழல் இல்லாம அரசியல்.பண்ண முடியாது.


தமிழ்
மார் 18, 2024 15:47

இந்த sbi வங்கி தங்கள் வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களிடமே உண்மையாக இல்லை. இதில் உச்ச நீதிமன்றத்திடமா உண்மையை சொல்லப்போகிறார்கள்? அப்படியே சொன்னாலும் அரசாங்கம்தான் சொல்லவிடுவார்களா.


Mohan
மார் 18, 2024 15:18

சும்மா விடியல் ஆட்கள் தங்களுக்கு எந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு சவுகரியமோ பிரச்னை இல்லையோ அதுக்கு ""ஜனநாயகத்தின் வெற்றி""ன்னு ஆடறது தெரியுது. மாத்த முடியாதுன்னு தெரிஞ்சும் "நீட் ""டை ஒழிக்கிறேன்னு பயங்காட்டுகின்றன. இத்தனை கூப்பாட்டுக்கு பதிலாக உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீட்டு மனு போடலாமே ?? செய்ய மாட்டாங்க... ஏன்னா அவிங்க """ரொம்ப நல்லவங்க


தமிழ்
மார் 18, 2024 19:51

இல்லப்பா. நீதான் ரொம்ப நல்லவன்.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ