உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மகளை பலாத்காரம் செய்ய முயன்ற கணவரை துண்டு போட்ட மனைவி

மகளை பலாத்காரம் செய்ய முயன்ற கணவரை துண்டு போட்ட மனைவி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெலகாவி: கர்நாடகாவில், மகளை பலாத்காரம் செய்ய முயற்சித்த கணவரை கொன்று, உடலை இரண்டாக வெட்டி வயலில் வீசிய மனைவி கைது செய்யப்பட்டார்.கர்நாடக மாநிலம், பெலகாவி, சிக்கோடியின் உமராணி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமந்த் இட்னாளே, 35. இவரது மனைவி சாவித்திரி, 30. தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

கொடுமை

விவசாய கூலி வேலை செய்யும் ஸ்ரீமந்த், மதுவுக்கு அடிமையானவர். தினமும் குடித்து வந்து மனைவியை அடிப்பார். பைக் வாங்க விரும்பிய ஸ்ரீமந்த், பணத்துக்காக பலருடன் உல்லாசமாக இருக்கும்படி மனைவியை கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, குடிபோதையில் வீட்டுக்கு வந்த ஸ்ரீமந்த், உல்லாசமாக இருக்க மனைவியை அழைத்தார். அவர் மறுத்ததால், தன் 13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தார். பொறுமை இழந்த சாவித்திரி, பெரிய கல்லை எடுத்து, கணவரின் மண்டையில் ஓங்கி அடித்ததில், அவர் உயிரிழந்தார்.

விசாரணை

இதையடுத்து, கணவரின் உடலை இரண்டாக வெட்டி, சிறிய டிரம்மில் போட்டு உருட்டியபடியே கொண்டு சென்று, வீட்டின் பக்கத்தில் இருந்த வயலில் வீசினார்.டிரம்மை கழுவி கிணற்றில் போட்டார். ரத்தக்கறை படிந்த மெத்தை, உடைகளை கல்லைக் கட்டி, கிணற்றில் போட்டார். வீட்டுக்கு வந்து ரத்தக்கறைகளை கழுவி சுத்தம் செய்து, உடைகளை எரித்து, சாம்பலை குப்பை தொட்டியில் வீசினார். 'நடந்த சம்பவத்தை யாரிடமும் கூற வேண்டாம்' என, பிள்ளைகளிடம் கூறினார்.நேற்று காலை வயலில் கிடந்த ஸ்ரீமந்த் உடலை கண்ட அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சிக்கோடி போலீசார், உடலை மீட்டு விசாரணையில் இறங்கினர். முதலில், சாவித்திரி தனக்கு எதுவும் தெரியாது என்றார்.போலீசார் தீவிரமாக விசாரித்த போது, 'மகளை காப்பாற்ற வேறு வழியின்றி கணவரை கொன்றேன். நான் சிறைக்கு சென்றால், பிள்ளைகள் அனாதைகள் ஆவர் என, பயந்து நடந்ததை மறைத்தேன்' என, ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

mahesh
ஜன 03, 2025 21:36

மதுரை அருகே இதுபோன்ற சம்பவம் நடந்தபோது, ​​எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டாம் என எஸ்பி முடிவு செய்தார்.


Karthik
ஜன 03, 2025 19:48

அம்மா நீங்கள் பறித்தது ஒரு உயிரை என்றாலும் ,இந்த சமூகத்தில் வாழவே தகுதியற்ற ஒரு மிருகத்தின் உயிரைத்தான். பெற்ற பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக , வேலியாக இருந்து காக்க வேண்டியதே மேய துணியும் போது, மகளின் எதிர்காலத்தை காக்கும் பொருட்டு நீங்கள் செய்தது கொலையும் அல்ல, கொலைக்குற்றமும் அல்ல. இவரை எவ்வித வழக்குமின்றி விடுவிக்காவிடில்.. சட்டம் ஒரு இருட்டு அறையே.


Mc Cullum
ஜன 03, 2025 13:33

அம்மா நீ வாழ்க பல்லாண்டு. மிருகத்தை கொன்ற உன்னை நினைத்து பெருமையாக இருக்கு.


Padmasridharan
ஜன 03, 2025 12:09

குடிச்சிட்டு ?? காவல் & மருத்துவர் பெண்களுக்கு செய்த காரியம் இதுக்கு முன்னர் நடந்துள்ளது TASMAC அடுத்த level தான் இது. லஞ்சம், கொள்ளை, கொலை, கற்பழிப்பு. தன்னலம் அதிகமாகி மத்தவங்கள அடிமையாக்கி பார்க்க நினைக்கிறது


Nallavan
ஜன 03, 2025 11:33

தயவு செய்து அந்த பெண்ணை விடுதலை செய்யவும், முடிந்தால் அந்த குடும்பத்திற்க்கு தேவை படும் உதவி செய்யவும்.


ஆரூர் ரங்
ஜன 03, 2025 10:29

கண்றாவி.


Barakat Ali
ஜன 03, 2025 08:46

சர்வாதிகாரியின் விருப்பம் நிறைவேறி வருகிறது ....


Kasimani Baskaran
ஜன 03, 2025 07:47

குடி குடியை கெடுக்கும் - குடிகாரன் தனக்கு பிறந்த பெண்ணைக்கூட கெடுப்பான்


baala
ஜன 03, 2025 09:27

கர்நாடகாவிலும் மது இருக்கிறதா. தமிழ்நாட்டில்தானே இருக்கிறது.


ராமகிருஷ்ணன்
ஜன 03, 2025 07:18

அடிப்படை காரணம் மது. இளம் விதவைகள் சங்க தலைவி கனிமொழி, தன்னுடைய சொந்த சாராய ஆலையை மூடுமாறு கேட்டு கொள்கிறோம்.


Matt P
ஜன 03, 2025 05:51

தண்ணி அடிச்சா பெத்த பிள்ளைகளை கூட கண்ணுக்கு தெரியாது சிலருக்கு. வசதி இருந்தால் அதிகமாக தவறுகள் நடப்பதில்லை. ஏழை பாழைகளுக்கு தான் எல்லா கஷ்டமும். பாதிக்கப்பட்டு வாழ்கிறவர்களும் ஏதோ ஒரு தாக்கத்தில் தான் வாழ்வார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் சட்டம் காரணமாகவும் தண்ணி அடித்தாலும் ஒரு வகையில் கட்டுப்பாடு காரணமாகவும் வரைமுறையோடு வாழ்கிறார்கள். தமிழ்நாடு போன்ற பகுதிகளில் தண்ணி தேவையா? அரசுக்கு வருமானம் என்பதற்காக இப்படிப்பட்ட சோகங்களை எல்லாம் மக்கள் அனுபவிக்க வேண்டுமா? நாலு பேரை வெட்டி வீழ்த்தி அதன் மீது சவாரி செய்யும் மக்கள் தொண்டு தேவையா என்பதை மக்கள் தான் சிந்திக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை