உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மே.வங்கத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை: அனுராக் தாக்கூர் பேட்டி

மே.வங்கத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை: அனுராக் தாக்கூர் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'மேற்கு வங்கத்தில் பெண்களும், பத்திரிகையாளரும் பாதுகாப்பாக இல்லை என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து அனுராக் தாக்கூர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மேற்கு வங்கத்தில் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இது ஜனநாயகத்தின் 4வது தூணுக்கு ஏற்பட்ட அவமானம். பத்திரிகை சுதந்திரம் இருக்க வேண்டும். இதனை காக்க மம்தா அரசு தவறிவிட்டது. பத்திரிகை சுதந்திரத்தை காப்பதில் ஒவ்வொரு மாநில அரசுக்கும் பொறுப்பு உள்ளது. மேற்கு வங்க முதல்வர் இனி இதுபோல் சம்பவம் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் பெண்களும், பத்திரிகையாளரும் பாதுகாப்பாக இல்லை. மத்திய அமைச்சர்கள் சிலர் சண்டிகருக்கு சென்று விவசாயிகளை சந்தித்து பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தி உள்ளனர். வன்முறை மற்றும் உயிர் சேதம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.315ல் இருந்து ரூ.340ஆக உயர்த்தி உள்ளோம்.விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. 2013-14ல் காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் ரூ.7,30,000 கோடி செலுத்தப்பட்டது. ஆனால் பா.ஜ., ஆட்சியில் கடந்த ஆண்டு ரூ.20 லட்சம் கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. அதாவது 3 மடங்கு அதிகம் ஆகும். பா.ஜ., அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக ஒவ்வொரு முடிவையும் எடுத்து வருகிறது. நாங்கள் அதை தொடர்ந்து செய்வோம். 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆட்சி செய்து எதுவும் செய்யாதவர்களை விவசாயிகளுக்கு பா.ஜ., அரசு ஏதும் செய்யவில்லை என சொல்லக் கூடாது. இவ்வாறு அனுராக் தாக்கூர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramesh Sargam
பிப் 23, 2024 07:45

ஒரே ஒரு பெண் மிக மிக பாதுகாப்பாக இருக்கிறார். அவரால்தான் மற்ற பெண்களுக்கு பாதுகாப்பில்லை.


தாமரை மலர்கிறது
பிப் 23, 2024 02:08

மம்தா, கெஜ்ரி மற்றும் ஸ்டாலின் அரசை கலைப்பது, சட்ட ஒழுங்கை ஏற்படுத்தும்.


Venkatesan.v
பிப் 23, 2024 00:49

அப்ப உபில?? எல்லாம் சௌக்கியமா??????


Narayanan Muthu
பிப் 22, 2024 20:35

இதை சொல்ல உங்களுக்கு கூச்சமாக இல்லையா. ஒட்டு மொத்த பாஜக ஆட்சியில் அதுதானே நடந்து கொண்டிருக்கிறது. இதற்க்கு எத்தனையோ உதாரணங்கள். உன்னாவ் சம்பவம் முதற்கொண்டு மணிப்பூர் சம்பவம் வரை எத்தனையோ ஆசிபா பனோக்கள். போதும் நிறுத்துங்கள் உங்கள் நீலி கண்ணீரை.


gayathri
பிப் 23, 2024 10:41

அருமை. வெக்கமே இல்லாமல் பேசுபவர்களை என்ன செய்வது.


SUBBU,MADURAI
பிப் 22, 2024 18:45

Do you know how Justice Chandrachud saved democracy in Bengal panchayat polls? 1) In 2018 panchayats, TMC was winning 20,000 seats uncontested 2) Opposition candidates said TMC goons were stopping them from filing nominations 3) They said it was too dangerous to physically go to State Election Commission office to file nomination 4) Calcutta High Court ordered SEC to let people file nominations online 5) A Supreme Court bench including Justice Chandrachud overruled Calcutta HC order and said nominations must be filed physically. 6) TMC won 20,000 seats uncontested, which made democracy 100 safe in Bengal.


DVRR
பிப் 22, 2024 18:39

மே.வங்கத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை: அனுராக் தாக்கூர் பேட்டி.தவறு . முஸ்லிம்கள் ஆட்சியில் என்ன நடந்ததோ அது தான் நடக்கின்றது இந்த Worst Bengal ல் Waste Bengal ல்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை