உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிவன் கோவிலில் ராகுல் வழிபாடு

சிவன் கோவிலில் ராகுல் வழிபாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோடா: ஜார்க்கண்ட் மாநிலத்தில், பாரத ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல், அங்குள்ள வைத்தியநாதர் கோவிலில் நேற்று பயபக்தியுடன் வழிபாடு நடத்தினார். லோக்சபா தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் எம்.பி., ராகுல் பாரத ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் நடைபயணத்தை, ஜன., 14ல் மணிப்பூரில் துவக்கினார். அவரின் யாத்திரை நேற்று காலை ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தை அடைந்தது.அங்குள்ள தேவ்கர் நகருக்கு சென்ற ராகுல், புகழ்பெற்ற பாபா வைத்தியநாதர் கோவிலில் வழிபாடு நடத்தினார். அப்போது, சட்டையின்றி பட்டு வேட்டி, துண்டு அணிந்து, நெற்றியில் பெரிய அளவில் விபூதி, குங்குமம் பூசி பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார். நடைபயணத்தை முடித்து, இரவு தன்பாத் தொகுதியில் தங்கினார். இந்த யாத்திரையின் போது, ஜார்க்கண்ட் மாநிலத்தில், 13 மாவட்டங்களுக்கு அவர் செல்கிறார்.கோடா மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: ஜார்க்கண்ட் மக்கள் காங்., ஆதரவு அரசை தேர்ந்தெடுத்தனர். ஆனால், பிரதமர் மோடி அரசு, அமலாக்கத்துறை, சி.பி.ஐ.,யை பயன்படுத்தி, பா.ஜ.,வை எதிர்த்த அனைவரையும் சிறையில் அடைத்தது. இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை, பா.ஜ., கைப்பற்ற முற்பட்டது. காங்கிரஸ் உறுதியாக நின்று ஜார்க்கண்ட் அரசையும், மக்கள் தீர்ப்பையும் காப்பாற்றி உள்ளது. இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

DVRR
பிப் 04, 2024 19:04

நடைபயணத்தை முடித்து???போவது எல்லாம் நவீன மயமான உபகரணங்கள் உள்ள மினி பஸ்ஸில் கேட்டால் நடை பயணம் என்பது???ஒரு சிட்டிக்கு வரவேண்டியது கொஞ்சம் தூரம் நடக்கவேண்டியது அங்கிருந்து இன்னொரு சிட்டிக்கு அழகு பஸ்ஸில் சொல்லவேண்டியது பிறகு இறங்கி கொஞ்ச தூரம் நடக்கவேண்டியாது???60 பஸ் இந்த தடவை போன தடவை 74 பஸ் . Congress spent Rs 71.8 crore on Rahul Gandhi's Bharat Jodo Yatra15.3% of its total annual spend. The party's receipts in 2022-23 is Rs 452 Crores So This yatra will also be same. இது நடை பயணம் என்று டப்பா அடிப்பது?????????


sridhar
பிப் 04, 2024 17:39

குமரியில் இருந்து கேரளா செல்லும் வழி எல்லாம் கிறிஸ்துவர்களுடன் நடந்தார், பேசினார் . , சர்ச்சில் உணவு உண்டார் , தூங்கினார் , வழிபட்டார்.


ஆரூர் ரங்
பிப் 04, 2024 17:26

அங்கு பொதுவாக வைத்தியநாதர் என அழைப்பதில்லை


kulandai kannan
பிப் 04, 2024 17:05

தேர்தல் வந்தால் மட்டும் வேஷம்..


jayvee
பிப் 04, 2024 13:23

உங்க படத்துல பப்புவ காணுமே சாமி. எல்லாம் பூஜாரிகளா இருக்காங்க ..


Indian
பிப் 04, 2024 12:14

நீங்கள் என்ன நடித்தாலும்.......


Rajarajan
பிப் 04, 2024 12:05

நீங்க பழனிக்கே பால் காவடி எடுத்தாலும், வண்டி ஒரு அடி நகர மாட்டேங்குது.


NicoleThomson
பிப் 04, 2024 11:26

இந்துக்கள் அப்பாவிகள்? அதாவது ஒற்றுமையில்லாதவர்கள் என்று நடிகர்களுக்கு நன்றாகவே தெரியும்


Rvelmurugan
பிப் 04, 2024 11:07

எலெக்ஷன் வரை நாடகம்


அசோகா
பிப் 04, 2024 10:00

கோமாளி பய வேஷம் கட்ட ஆரம்பிச்சிட்டார்


மேலும் செய்திகள்





புதிய வீடியோ