அமெரிக்காவில் 11.2 லட்சம் சர்வதேச மாணவர்கள்
கல்வி பெறும் நோக்கில் அமெரிக்காவிற்கு செல்லும் அயல்நாட்டு மாணவர்கள் குறித்த ஆய்வு அறிக்கையை 'இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் எஜுகேஷன்' ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.அதன்படி, உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா செல்லும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 2023-24ம் ஆண்டில் முந்தைய ஆண்டைவிட 6.6 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி, 2022 -23ம் ஆண்டில் 10,57,188 ஆக இருந்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 2023-24ம் ஆண்டில் 11,26,690 ஆக உயர்ந்துள்ளது.கடந்த 2022-23ம் ஆண்டில் 2,68,923 ஆக இருந்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, 2023-24ம் ஆண்டில் 3,31,602 ஆக அதிகரித்து, 23.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேநேரம், சீன மாணவர்களின் எண்ணிக்கை 2,89,526லிருந்து 2,77,398 ஆக குறைந்து 4.2 சதவீதமாக சரிந்துள்ளது.அமெரிக்கா சென்ற வெளிநாட்டு மாணவர்களின் விபரம்:இந்தியா - 3,31,602சீனா - 2,77,398தென்கொரியா - 43,149கனடா - 28,998தைவான் - 23,157வியட்நாம் - 22,066நைஜீரியா - 20,029பங்களாதேஷ் - 17,099பிரேசில் - 16,877நேபாளம் - 16,742சர்வதேச மாணவர்களின் விருப்பமான துறைகள்:கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் - 2,80,922இன்ஜினியரிங் - 2,10,163பிசினஸ் அண்டு மேனேஜ்மெண்ட் - 1,59,810பிசிக்கல் அண்டு லைப் சயின்சஸ் - 88,717சோசியல் சயின்சஸ் - 84,307பைன் அண்டு அப்ளைடு ஆர்ட்ஸ் - 54,159ஹெல்த் புரொபஷன்ஸ் - 36,615கம்யூனிகேஷன்ஸ் அண்டு ஜர்னலிசம் - 21,481மற்ற துறைகள் - 1,90,516பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர் சேர்க்கை விபரம்:நியுயார்க பல்கலைக்கழகம் - நியுயார்க் - 27,247நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகம் - பாஸ்டன் - 21,023கொலம்பியா பல்கலைக்கழகம் - நியுயார்க் - 20,321அரிசோனா ஸ்டேட் பல்கலைக்கழகம் - டெம்ப் - 18,430யுனிவர்சிட்டி ஆப் சதர்ன் கலிபோர்னியா - லாஸ் ஏஞ்சல்ஸ் - 17,469யுனிவரிசிட்டி ஆப் இல்லினோய்ஸ் - சாம்பெய்ன் - 15,376பாஸ்டன் பல்கலைக்கழகம் - பாஸ்டன் - 12,853கலிபோர்னியா பல்கலைக்கழகம் - பெர்க்லி - 12,441மிச்சிகன் பல்கலைக்கழகம் - ஆன் ஆர்பர் - 11,766வாஷிங்டன் பல்கலைக்கழகம் - சியாட்டல் - 10,720கலிபோர்னியா பல்கலைக்கழகம் - லாஸ் ஏஞ்சல்ஸ் - 10,446டெக்சாஸ் பல்கலைக்கழகம் - டல்லாஸ் - 10,491