உள்ளூர் செய்திகள்

வாய்ப்புகளை எளிதாக்கும் சி.பி.எஸ்.இ.,!

சி.பி.எஸ்.இ., எனும் 'சென்ட்ரல் போர்டு ஆப் செகண்டரி எஜுகேஷன்', இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய கல்வி வாரியம். 1962ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த வாரியம், இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான பள்ளிகளை அங்கீகரித்துள்ளது.நோக்கம்தேசிய அளவில் சிறந்த பள்ளி கல்வியை வழங்குவதே சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் முக்கிய நோக்கம். அறிவியல், கணிதம், மொழி, சமூக அறிவியல் போன்ற பாடங்களில் வலுவான அடித்தளம் அமைத்து, படைப்பாற்றல், விமர்சன சிந்தனை, பிரச்சனை தீர்க்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதும் இதன் நோக்கம். மேலும், உயர் கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.கற்றல் முறைகள்சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் பெரும்பாலும் என்.சி.இ.ஆர்.டி., பாடப்புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டது. இதில் செயல்பாட்டு அடிப்படையிலான கற்றல் மற்றும் நடைமுறை வெளிப்பாடு என்பவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தொடர் மற்றும் விரிவான மதிப்பீடு முறையின் வாயிலாக மாணவர்களின் முழுமையான வளர்ச்சி மதிப்பீடு செய்யப்படுகிறது. மேலும், நீட், ஜே.இ.இ., யு.பி.எஸ்.சி., போன்ற தேர்வுகளுக்கான அடிப்படைத் தளத்தை அமைக்கிறது.நன்மைகள்சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் நன்மைகள் பலவாக உள்ளன. பல்வேறு நாடுகளிலும் அங்கீகாரம் பெற்ற பாடத்திட்டம் என்பதால், உலகளாவிய வாய்ப்புகளை மாணவர்கள் பெறுகின்றனர். போட்டித் தேர்வுகளுக்கான சிறந்த தயாரிப்பை வழங்குகிறது. மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் புதுமை சிந்தனையை ஊக்குவிக்கிறது. மேலும், மாறும் கல்வி நுட்பங்கள், டிஜிட்டல் கற்றல், திறன் மேம்பாடு போன்றவற்றை இணைத்துக்கொண்டு முன்னேற்றம் பெறுகிறது.சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் மாணவர்களுக்கு முழுமையான கல்வி அனுபவத்தை வழங்குகிறது. அறிவியல், மொழி, சமூக திறன், வாழ்வியல் மதிப்புகள் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து, எதிர்கால உலகின் சவால்களை சந்திக்க தக்கவாறு மாணவர்களை உருவாக்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !