உள்ளூர் செய்திகள்

கிரியேட்டிவ் எழுத்தர் எனும் திறன்வாய்ந்த பணி

"எழுதுதல் என்பது ஒரு திறமையல்ல, அது நமது வலிமையின் நீட்டிப்பு செயல்பாடாகும்". வார்த்தைகள் என்பது நமது எண்ணங்களை வெளிப்படுத்தக்கூடிய ஒரு வலிமையான கருவியாகும். வார்த்தைகள் என்பவை, மனித வாழ்வில் பலவிதமான நல்ல மற்றும் கெட்ட விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. தனது வார்த்தைகளால், பெரும்பான்மை மக்களைக் கட்டிப்போட்டு, அவர்களை தன்பால் ஈர்த்து, நாடுகளின் தலையெழுத்தையே மாற்றிய தலைவர்கள் உண்டு. அவர்கள், வார்த்தையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற வித்தை தெரிந்தவர்கள். இன்றும், இந்தியாவை எடுத்துக்கொண்டால், சில அரசியல் தலைவர்கள், பல்லாண்டு காலமாக, தமது வார்த்தைகளால், தம் தொண்டர்களை கட்டிப்போடும் திறன் பெற்றவர்களாக இருக்கிறார்கள். அன்பும், பிரியமும் நிறைந்த வார்த்தைகள், ஒரு மனிதரை காதலில் வீழ்த்துகின்றன. பல ஆன்மீக குருக்கள், தம் சீடர்களை, வார்த்தைகளால் கட்டிப்போடும் வல்லமைப் பெற்றவர்கள். ஒரு திறமையான வியாபாரி, தன் வார்த்தை ஜாலத்தால் ஒரு பொருளை விற்கிறார். அதேசமயம், வார்த்தை பிரயோகங்கள் பல தீய விளைவுகளையும் கொண்டு வருகின்றன. ஒரு மதத்தைப் பற்றி எழுதப்படும் தவறான கருத்தானது, மதக் கலவரத்தைக் கொண்டு வருகிறது. அரசியலைப் பற்றி எழுதப்படும் கோபமூட்டும் கருத்துக்கள், பல உயிர்களை பலிவாங்குகின்றன. வார்த்தைகள் நம்மை மகிழ்வூட்டும். வார்த்தைகள் நமக்கு சிரிப்பைக் கொண்டுவரும். வார்த்தைகள் விரும்பும் மாற்றத்தை உண்டாக்கும். "வாள் முனையை விட, பேனா முனை வலிமையானது" என்ற புகழ்பெற்ற பொன்மொழியை நாம் அனைவரும் படித்திருப்போம் மற்றும் கேட்டிருப்போம். ஒரு வார்த்தையின் சக்தி, ஒரு வாளையே இரண்டு துண்டாக்கிவிடும். கிரியேட்டிவ் எழுத்தர் என்றால் என்ன? ஒருவர், வழக்கமான முறையிலிருந்து சற்று மாறி, வித்தியசமாக, சிந்தித்து, அதை ரசிக்கும்படியான முறையில் எழுதுகிறார். அதுதான் கிரியேட்டிவ் ரைட்டிங். அவர்தான் கிரியேட்டிவ் ரைட்டர். ஒரு கிரியேட்டிவ் ரைட்டர், கற்பனையாகவோ அல்லது கற்பனை இல்லாமலோ எழுதலாம். அவர்கள், நாவல்கள், வாழ்க்கை வரலாறுகள், கதைகள், கவிதைகள், செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் கிரியேட்டிவ் உள்ளடக்கங்களை எழுதுபவராக இருக்கலாம். படிப்பவர், ஏதேனும் ஒரு வகையில் கவரப்படும் விதத்தில் எழுதுவதுதான் கிரியேட்டிவ் எழுத்தருடைய திறமை. தேவைப்படும் திறன்கள் படைப்பாக்கம்நீடித்த தன்மைகற்பனைத் திறன்விமர்சனங்களை தாங்கும் பக்குவம்ஆர்வமூட்டும் எழுத்துத் திறன்நல்ல வார்த்தை வளத்திறன்மொழியறிவுபொறுமைதகவல் தொடர்பு திறன்நேர மேலாண்மை போன்ற திறன்கள் ஒரு கிரியேட்டிவ் எழுத்தருக்கு இருத்தல் அவசியம். கிரியேட்டிவ் ரைட்டிங் படிப்பில் சேர்வதற்கு நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகள் யாவை? இப்படிப்புகளில் சேர்வதற்கு, நுழைவுத்தேர்வுகளில் கலந்துகொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேசமயம், இப்படிப்பிற்காக எந்தவிதமான பொது நுழைவுத் தேர்வும் நடத்தப்படுவதில்லை. ஆனால், இப்படிப்பை வழங்கும் ஒவ்வொரு கல்வி நிறுவனமும், தனக்கான தனி நுழைவுத் தேர்வுகளை நடத்திக் கொள்கின்றன. இப்படிப்பை எங்கே மேற்கொள்ளலாம்? இந்திய அளவிலான கல்வி நிறுவனங்கள் ஏ.பி.காலேஜ் ஆப் ஜர்னலிசம் - ஆந்திராஅமைட்டி இன்ஸ்டிட்யூட் ஆப் இங்கிலீஷ் அன்ட் பிசினஸ் கம்யூனிகேஷன் - உத்திர பிரதேசம்டாக்டர்.பாபாசாஹேப் அம்பேத்கர் ஓபன் யுனிவர்சிட்டி - குஜராத்அரசு ராசா பி.ஜி. காலேஜ் - உத்திர பிரதேசம்இக்னோ - டில்லி சர்வதேச அளவிலான கல்வி நிறுவனங்கள் Columbia School of the Arts (New York City, USA)University of Wisconsin- Madison (Wisconsin, USA)UCLA (California, USA)University of East Anglia (Norwich, England)Gold Coast Institute of TAFE (Queensland, Australia) படிப்பு விபரங்களும், அதற்கான தகுதிகளும் * கிரியேட்டிவ் ரைட்டிங்கில், இளநிலை பைன் ஆர்ட்ஸ் படிப்பு காலம் - 3 ஆண்டுகள் தகுதி - அங்கீகரிக்கப்பட்ட வகையில், ஏதேனும் ஒரு பிரிவில், பள்ளிப் படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். * கிரியேட்டிவ் ரைட்டிங்கில், முதுநிலை பைன் ஆர்ட்ஸ் படிப்பு காலம் - 1 முதல் 2 ஆண்டுகள் தகுதி - அங்கீகரிக்கப்பட்ட வகையில், ஏதேனும் ஒரு பிரிவில், இளநிலைப் பட்டப் படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். * ஜர்னலிசம் மற்றும் கிரியேட்டிவ் ரைட்டிங்கில், சான்றிதழ் படிப்பு காலம் - 6 மாதங்கள் முதல் 1 ஆண்டு தகுதி - அங்கீகரிக்கப்பட்ட வகையில், ஏதேனும் ஒரு பிரிவில், பள்ளிப் படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். * கிரியேட்டிவ் ரைட்டிங்கில் டிப்ளமோ படிப்பு காலம் - ஒரு ஆண்டு தகுதி - அங்கீகரிக்கப்பட்ட வகையில், ஏதேனும் ஒரு பிரிவில், பள்ளிப் படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். * ஆங்கில வழியில், கிரியேட்டிவ் ரைட்டிங்கில், முதுநிலை டிப்ளமோ படிப்பு காலம் - ஒரு ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட வகையில், ஏதேனும் ஒரு பிரிவில், இளநிலைப் பட்டப் படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். பணியின் தன்மை ஒரு கிரியேட்டிவ் எழுத்தரின் பணித் தன்மைகள், விரிவான அம்சம் கொண்டவை. இப்பணியில் ஈடுபட்டிருக்கும் ஒருவருக்கு, பல்வேறான பொறுப்புகள் உண்டு. அவை, * சிறுகதைகள், கற்பனை மற்றும் கற்பனையற்ற அம்சங்களுக்காக, மூல கருத்தை மாற்றியமைத்தல். கதையின் வரிகள் மற்றும் எண்ணங்களை வெளிப்படுத்த, எழுதப்பட்ட வார்த்தையை பயன்படுத்துதல். * பத்திரிகைகள், வணிக ஜர்னல்கள், செய்தி கடிதங்கள் மற்றும் வலைப் பக்கங்களுக்காக, புத்தகங்கள் மற்றும் content -களை எழுதுதல். * ரேடியா மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு, மோஷன் படங்கள் மற்றும் இதர தேவைகளுக்காக, கருத்தாக்கங்களை உருவாக்குதல். * ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட மெட்டீரியல்களை, வலை மற்றும் இதர தகவல்தொடர்பு சாதனங்களுக்காக மேம்படுத்துதல். * பலவிதமான தலைப்புகளில் வரிவான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் * Outline மற்றும் சாதாரண draft -களை எழுதுதல் * பொருத்தமாக தேடுதல் மற்றும் வளங்களை குறிப்பிடுதல். * எழுத்துப் பிழை மற்றும் இலக்கணப் பிழை இருக்கிறதா என்று சரிபார்த்தல் * திருத்தியமைத்தல் மற்றும் திருத்தி எழுதுதல் ஆகிய பணிகளின் பொருட்டு, ஆசிரியருடன் சேர்ந்து பணிசெய்தல். * விரிவான உண்மை ஆராயும் செயல்பாட்டில் பங்கேற்றல். * அத்தியாயங்கள் மற்றும் பகுதிகள் என்ற வகையில், மெட்டீரியல்களை தயார்படுத்தல். * ரசிகர்கள் மற்றும் வாசகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் வகையில், வலைப் பக்கங்களை நடத்துதல். * புத்தகங்களை வெளியிடும் பொருட்டு, இலக்கிய ஏஜென்டுகளுடன் சேர்ந்து பணியாற்றல். * புத்தக சுற்றுலாவுக்கு செல்லுதல். பணி வாய்ப்புகள் இத்துறையில், பல்வேறு வகைப்பட்ட பணி வாய்ப்புகள் நிறைந்துள்ளன. கீழ்கண்ட பிரிவுகளில் ஒரு கிரியேட்டிவ் எழுத்தர் பணி வாய்ப்புகளைப் பெறலாம். அவை, வாழ்த்து அட்டை எழுதுபவர்காமிக்ஸ் புத்தகம் எழுதுபவர்நாவல் எழுதுபவர்கிரியேட்டிவிட்டி பயிற்சியாளர்எழுதுவதற்கான பயிற்சியாளர்விளம்பரத்துறைஸ்கிரீன் ரைட்டர்பாடல் எழுதுபவர்ப்ரீலேன்ஸ் ஷார்ட் பிக்ஷன் எழுதுபவர்கிரியேட்டிவ் ரைட்டிங் ஆலோசகர்வாழ்க்கை வரலாறு எழுதுபவர்பயண எழுத்தாளர்கட்டுரை எழுதுபவர்காலம்னிஸ்ட்வீடியோ கேம் எழுதுபவர்தனிப்பட்ட கவிஞர்நாடகம் எழுதுபவர்பிளாகர் கிரியேட்டிவ் ரைட்டிங் கன்சல்டன்ட் சம்பளம் ஒரு கிரியேட்டிவ் எழுத்தர் பணி புரியும் நிறுவனம் மற்றும் அவர் மேற்கொள்ளும் புராஜெக்ட் ஆகியவற்றைப் பொறுத்து, அவரின் சம்பளம் மாறுபடுகிறது. இத்துறையில், தொடக்கத்தில் அடியெடுத்து வைக்கும் ஒருவர், மாதம் ரூ.8,000 முதல் ரூ.10,000 வரையும், அனுபவம் பெற்ற ஒருவர், மாதம் ரூ,50,000 வரையிலும் பெற முடியும். இத்துறையின் வாய்ப்புகள் ஒருவர், எந்தவொரு KPO நிறுவனத்திலும், கன்டென்ட் ரைட்டராக பணிபுரிய முடியும். மேலும், ப்ரீலேன்ஸ் ரைட்டராக இருந்து, நல்ல வருமானத்தைப் பெற முடியும். கதை எழுதுதல், கட்டுரை எழுதுதல், புத்தகங்கள் மற்றும் கதை வசனம் எழுதுதல் உள்ளிட்ட வேலைகளுக்கு திறமையுள்ள ஆட்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். பல்வேறான நிறுவனங்களில், தொழில் ரீதியிலான எழுத்தராகவும் பணிபுரிய முடியும். மேலும், அதிகளவிலான பணம் புழங்கும் சினிமாத்துறையில் கதை மற்றும் திரைக்கதை வசனம் எழுதுதல் ஆகிய பணி வாய்ப்புகளைப் பெற முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !