இந்தியாவைத் தேடி வரும் அயல்நாட்டு மாணவர்கள்
உயர்கல்விக்காக வெளிநாட்டைத் தேடி இந்திய மாணவர்கள் சென்றுகொண்டிருக்கும் நிலையில் பள்ளிக் கல்விக்காக இந்தியாவைத் தேடி வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்வதேச தரத்தில் கற்றுக்கொடுக்கப்படும் பாடங்கள், கல்வி நிலையம் அமைந்திருக்கும் சூழல், அரசின் திட்டங்கள் போன்றவை மாணவர்களை இந்திய பள்ளிகளை நோக்கி இழுக்கின்றன. இதில் குறிப்பிடத்தக்க இடத்தில் இருப்பது முசோரியில் உள்ள வுட்ஸ்டாக், கொடைக்கானலில் உள்ள இன்டர்நேஷனல், நீலகிரியில் உள்ள ஹீப்ரான், டார்ஜிலிங்கில் உள்ள செயின்ட் பால்ஸ் போன்ற நூறாண்டுகளைக் கடந்த பள்ளிகள் கல்வி நிலையங்கள் வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதில் முக்கிய இடத்தில் உள்ளன. இந்திய கலாச்சார உறவுகள் மன்றத்தால் (ஐ.சி.சி.ஆர்.)பல்வேறு வகையான உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அபசாகேப் பன் உதவித்தொகைத் திட்டம், காமன்வெல்த் திட்டம், டெக்னிக்கல் கோ ஆப்பரேஷன் ஸ்கீம் ஆஃப் த கொழும்பு திட்டம், ரெசிபுரோகால் உதவித்தொகைத் திட்டம், சார்க் உதவித்தொகைத் திட்டம் போன்ற ஆசிய நாடுகளுக்கான உதவித்தொகைத் திட்டங்களோடு மற்ற நாடுகளுடன் எற்படுத்தப்பட்டுள்ள மாணவர் பரிமாற்ற திட்டங்களும் மாணவர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு உதவி புரிகின்றன. மொத்த மாணவர்கள் எண்ணிக்கையில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை... பெங்களூர் சர்வதேச உறைவிடப் பள்ளி, பெங்களூர் - 150 / 430பாத்நேஸ் வேர்ல்டு ஸ்கூல், ஆரவல்லி - 340 / 1300இண்டஸ் சர்வதேச பள்ளி, பெங்களூர் - 600 / 1208நல்லாயன் சர்வதேச பள்ளி, நீலகிரி - 140 / 708ஹீப்ரான் ஸ்கூல், நீலகிரி - 215 / 359வுட்ஸ்டாக் ஸ்கூல், முசோரி - 318 / 530ஜி.டி. கோயங்கா வேர்ல்டு ஸ்கூல், சோனா - 396 / 990 இந்த எண்ணிக்கைகளே, மாணவர்கள் இந்தியக் கல்வி நிலையங்களை எப்படி விரும்புகிறார்கள் என்பதற்கு சாட்சி. மாணவர்களுக்கு மேலும் தரமான கல்வியை வழங்கும்போது, பிற கல்வி நிலையங்களையும் வெளிநாட்டு மாணவர்கள் விரும்புவதற்கான வாய்ப்புள்ளது. இது பள்ளிகளுக்கு மட்டுமல்ல கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்தும்.