உள்ளூர் செய்திகள்

பேக்கேஜிங் படிப்புகள்

மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அங்கீகாரத்துடன் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பேக்கேஜிங் கல்வி நிறுவனத்தில் பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன. வழங்கப்படும் படிப்புகள்:முதுநிலை பட்டப்படிப்புகள்:எம்.எஸ்சி., - பேக்கேஜிங் டெக்னாலஜிஅங்கீகரிக்கும் பல்கலைக்கழகம்: ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஐதராபாத்கால அளவு: 2 ஆண்டுகள்வளாகம்: ஐதராபாத்தகுதிகள்: பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் 4 ஆண்டு கால முழுநேர இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.எம்.எஸ்சி., - பேக்கேஜிங் டெக்னாலஜிஅங்கீகரிக்கும் பல்கலைக்கழகம்: குரு கோபிந்த் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகம், டில்லிகால அளவு: 2 ஆண்டுகள்வளாகம்: டில்லிகல்வித்தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை முதன்மை அல்லது இரண்டாம் பாடமாகக் கொண்ட மூன்று ஆண்டு பொறியியல் / தொழிநுட்பம் / அறிவியல் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.முதுநிலை டிப்ளமா படிப்பு: பி.ஜி.டி.பி., - போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் பேக்கேஜிங்கால அளவு: 2 ஆண்டுகள்வளாகங்கள்: மும்பை மற்றும் கொல்கத்தாகல்வித்தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை முதன்மை அல்லது இரண்டாம் பாடமாகக் கொண்ட மூன்று ஆண்டு பொறியியல் / தொழிநுட்பம் / அறிவியல் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.சான்றிதழ் படிப்பு: சி.பி.இ., - சர்ட்டிபைடு பேக்கேஜிங் இன்ஜினியர்கால அளவு: ஓர் ஆண்டுவளாகம்: சென்னைகல்வித்தகுதி: யு.ஜி.சி., அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பில் தேர்ச்சிதேர்வு முறை: சான்றிதழ் படிப்பு தவிர, பிற அனைத்து படிப்புகளும் கல்வி நிறுவனத்தின் ஐ.ஐ.பி.சி.இ.டி., எனும் பிரத்யேக நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.விபரங்களுக்கு: https://www.iip-in.com/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !