காமன்வெல்த் மாஸ்டர் உதவித்தொகை
யு.கே., பல்கலைக்கழகங்களில் முழுநேர முதுநிலை பட்டப்படிப்பு படிக்க சேர்க்கை பெறுபவர்கள் காமன்வெல்த் மாஸ்டர் உதவித்தொகை பெற ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.காம்ன்வெல்த் ஸ்காலர்ஷிப் கமிஷனால் தேர்ந்தெடுக்கப்பட்ட யு.கே., பல்கலைக்கழங்களில் ஏதேனும் ஒன்றில் செப்டம்பர் / அக்டோபர் 2023 முதல் துவங்கப்படும் படிப்புகளில் சேர்க்கை பெறுபவர்களுக்கு இந்த உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். கீழ்காணும் 6 தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை சார்ந்த பிரிவுகளில் மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.தலைப்புகள்:• வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்• சுகாதார அமைப்புகள் மற்றும் திறனை வலுப்படுத்துதல்• உலகளாவிய செழிப்பை ஊக்குவித்தல்• உலக அமைதி, பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துதல்• பின்னடைவு மற்றும் நெருக்கடிகளுக்கு பதிலளிப்பதை வலுப்படுத்துதல்• அணுகல், சேர்த்தல் மற்றும் வாய்ப்புதகுதிகள்:இந்திய குடிமகனாகவும், இந்தியாவில் நிரந்தரமாக வசிப்பவராகவும் இருத்தல் வேண்டும். காமன்வெல்த் உதவித்தொகை கமிஷனால் குறிப்பிடப்பட்ட அனைத்து தகுதி விதிமுறைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். செப்டம்பர் 2023ல் யு.கே.,வில் துவங்க உள்ள வகுப்புகளில் பங்கேற்பதற்கான தகுதிகளை பெற்று தயாராக இருப்பவராக இருத்தல் வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: 2023 காமன்வெல்த் மாஸ்டர் உதவித்தொகைக்கு இந்திய மாணவர்களிடம் இருந்து விண்ணப்பிங்களை பெற்று, இந்திய கல்வி அமைச்சகம் 39 மாணவர்களை காமன்வெல்த் கமிஷனுக்கு பரிந்துரைக்கிறது. அவ்வாறு பரிந்துரைக்கப்படும் மாணவர்கள் உதவித்தொகை பெற தேர்வு செய்யப்பட்டதாக பொருள் இல்லை. பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்து தகுதியானவர்களை காமன்வெல்த் ஸ்காலர்ஷிப் கமிஷன் தான் தேர்வு செய்யும். அதுவே இறுதியானது.விண்ணப்பிக்கும் முறை: முழு விண்ணப்ப செயல்முறையும் ஆன்லைன் வாயிலாகவே நடைபெறும். இந்திய கல்வி அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, https://proposal.sakshat.ac.in/scholarship/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு முன்பாக, காமன்வெல்த் ஸ்காலர்ஷிப் கமிஷனின் இணையதளத்தில் பதிவு செய்திருப்பதும் அவசியம்.மேலும், https://cscuk.fcdo.gov.uk/ukuniversities/ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு யு.கே., பல்கலைக்கழகத்திடம் இருந்து பெறப்பட்ட சேர்க்கைக்கான உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும்.விபரங்களுக்கு: www.education.gov.in