வணிகம் மற்றும் சட்டம் தொடர்பான ஆன்லைன் வழி படிப்புகள்
உலகின் பிரதான கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களால் வழங்கப்படும் திறந்தவெளி ஆன்லைன் படிப்புகளில், அதிகளவிலான மாணவர்கள், உலகம் முழுவதிலுமிருந்தும் கலந்துகொண்டு பயன்பெறலாம். ஏனெனில், தாங்குமளவிற்கு கட்டணம், நேரடியாக கல்வி நிறுவனத்திற்கு செல்ல தேவையில்லாமை மற்றும் ஒருவர் தனக்கு வசதியான இடத்தில் மற்றும் நேரத்தில், தான் பட்டம் பெறுவதற்கு தேவையான செயல்பாடுகளை மேற்கொள்ளும் வசதிகள் போன்றவை இந்த வகை படிப்புகளின் சிறப்பம்சங்கள். AFTP படிப்புகளை, இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும், மாணவர்கள் இலவசமாக மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படிப்புகளை இலவசமாக தருவதன் நோக்கம் என்னவெனில், வளரும் நாடுகளில் உள்ள பரந்த மாணவர் சமூகம், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பயிற்சி மேற்கொள்வோர் ஆகியோர் மத்தியில் சமஅளவில் கல்வியை ஜனநாயகப் படுத்துவதேயாகும். ஏனெனில், வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள், உலகின் முதன்மை மேலாண்மை கல்வி நிறுவனங்களில், சிறப்புவாய்ந்த பேராசிரியர்களிடமிருந்து கல்விபெறும் வாய்ப்புகளை பொதுவாக பெறுவதில்லை. படிப்பை வெற்றிகரமாக நிறைவுசெய்யும் மாணவர்களுக்கு, பேராசிரியரின் கையொப்பம் இடப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்படும். இப்படிப்பை மேற்கொள்ளும்போது, மாணவர்கள் தங்களின் முதலீட்டு profile -ஐ மேம்படுத்திக்கொள்ள முடியும். படிப்பை, வெற்றிகரமாக பூர்த்திசெய்தவர்கள், தங்களுக்கு விருப்பமான வணிக வியூகத்தை தேர்வு செய்வதற்கும், படிப்படியான வழிகாட்டுதல்களைப் பெறுவதற்குமான வாய்ப்புகளைப் பெறுகிறார். இத்தகைய சேவைகள், முழுவதும் தானியங்கி மயமாக்கப்பட்டவை மற்றும் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு, personalised computation வசதியும் உண்டு. சில முக்கிய திறந்தவள (open source) கற்றல் தளங்கள் www.nptel.iitm.ac.in/ (IIT)www.futurelearn.com/ (UK universities)www.ocw.mit.edu/index.htm (MIT)www.khanacademy.org/ (Salman khan)www.academicearth.org/ (Ivy league US universities). சட்டம் தொடர்பான இன்றைய நிலை சமூகம் மற்றும் பொருளாதார துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை பிரதிபலிக்கும் கண்ணாடியாக சட்டத்துறை திகழ்கிறது. எனவே, சட்டத்துறை தொடர்ந்து மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்திய சூழலில், பல பெரிய வளர்ச்சிகள் ஏற்பட்டு வருவதால், அவற்றை கண்காணிக்கவும், நிர்வகிக்கவும், புதிய விதிமுறைகளும், சட்டங்களும் தேவைப்படுகின்றன. தாராளவாத கொள்கைக்குப் பிறகான உலகத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களை நிர்வகிக்க, Competition law, Mergers and Acquisitions, Intellectual property law and Securities law போன்ற சட்டங்கள் சிறப்பு வாய்ந்த அம்சங்களாய் உள்ளன. விமானப் போக்குவரத்து, உள்கட்டமைப்பு, இ-காமர்ஸ், விளையாட்டு, மீடியா மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறை ஆகிய பிரிவுகளின் செயல்பாடுகளை கையாள, உள்கட்டமைப்பு சட்டம், சைபர் சட்டம், விமானப் போக்குவரத்து சட்டம், கடல்சார் சட்டம் மற்றும் விளையாட்டு சட்டம் போன்றவை இருக்கின்றன. நமது கல்வித்திட்டம், மாறிவரும் நடைமுறைத் தேவைகளை ஈடுசெய்வதாய் இருப்பதில்லை. ஆனால், இன்றைய நிலையில், சட்டத்துறையைப் பொறுத்தவரை, அவ்வப்போது ஏற்படும் புதிய புதிய சிக்கல்களை தீர்க்கும் விதமாய், ஒருவர் up to date என்ற நிலையில் எப்போதும் இருக்க வேண்டும். இந்த குறைகளை தீர்க்க, mylaw.net பெரும் உதவியாக இருக்கிறது.