உள்ளூர் செய்திகள்

எம்.பி.ஏ., படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளை தேர்ந்தெடுத்தல்

ஒரு வணிகப் பள்ளியில் இடம்பெற நினைக்கும் ஒரு மாணவர், மேலாண்மைப் படிப்பிற்கான பல்வேறான நுழைவுத் தேர்வுகளில், எதை எழுதுவது என்பதை முடிவு செய்வதுதான் முதல் படி. ஒவ்வொரு நுழைவுத்தேர்வின் மீதும் உங்களுக்கு உள்ள புரிதல் மற்றும் உங்களின் விருப்பத்திற்கு அது எந்தளவிற்கு ஒத்துவருகிறது என்பதை வைத்து நாம் அதை முடிவு செய்ய வேண்டும். நீங்கள் களத்தில் இறங்கியவுடன், உங்களின் தயாரிப்பு நிலை மற்றும் எந்தளவிற்கு உங்களால் மதிப்பெண் பெற முடியும் என்பதை மதிப்பிட வேண்டும். நீங்கள், IIM, XLRI, FMS(Delhi university), IIT and IIFT போன்ற நாட்டின் முதல்தர வணிகப் பள்ளிகளில் சேர விரும்பினால், CAT, XAT and IIFT entrance exam ஆகிய நுழைவுத் தேர்வுகளில் ஒன்றை எழுத வேண்டும். CAT தேர்வின் மதிப்பெண்கள், IIM, IIT, FMS(DU) உள்ளிட்ட முன்னணி வணிகப் பள்ளிகளால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. XAT மதிப்பெண், XLRI - ஜாம்ஷெட்பூர், XIMB மற்றும் இதர பிரபல 100 வணிகப் பள்ளிகளால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. உங்களுக்கு, வெளிநாட்டு வணிகம், தகவல் தொடர்பு, நகர்ப்புற மேலாண்மை ஆகிய பிரிவுகளில் எம்.பி.ஏ., படிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தால், IIFT நுழைவுத் தேர்வை எழுதுவது சிறந்தது. மேலும், MICAT, CAT போன்ற நுழைவுத் தேர்வுகளையும் எழுதலாம். அதேசமயம், நார்சி மோன்ஜே மற்றும் சிம்பயோசிஸ் போன்ற புகழ்பெற்ற தனியார் வணிகப் பள்ளிகளில் சேர விரும்பினால், NMAT and SNAP போன்ற நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டும். இத்தகைய தேர்வுகள், மிதமான நிலை என்பதிலிருந்து கடினம் என்பது வரையிலான தன்மை வாய்ந்தவை. NMAT, SNAP போன்ற தேர்வுகளை வெல்ல வேண்டுமெனில், சிறப்பான முன்தயாரிப்பு மிகவும் முக்கியம். தேர்வுக்கு தயாராவதில், உங்களின் பலம் மற்றும் பலவீனங்கள் குறித்து ஒரு தெளிவான, நேர்மையான சுய மதிப்பீடு இருக்க வேண்டியது கட்டாயம். உங்களைப் பற்றிய சுயமதிப்பீட்டை மேற்கொள்ள சிரமமாக இருப்பின், சம்பந்தப்பட்ட நிபுணர்கள் அல்லது முன்னாள் மாணவர்களை உதவிக்காக நாடவும். உங்களால், அதிகளவிலான மதிப்பெண்களை எடுக்க முடிந்தால், CAT, XAT, IIFT and MICAT போன்ற போட்டிகள் நிறைந்த தேர்வுகளில் ஒன்றை எழுதலாம். ஏனெனில், இத்தகைய தேர்வுகளை வெல்ல, சிறப்பான முறையிலான முன்தயாரிப்பு மிகவும் முக்கியம். எனவே, அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு, ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும். அதேசமயம், சுமாரான வகையில் கட்டணம் வசூலிக்கும், ஓரளவிற்கு பெயர்பெற்ற ஒரு வணிகப் பள்ளியில் சேர விரும்பினால், MAT, CMAT, ATMA and IBSAT ஆகிய தேர்வுகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து எழுதலாம். மேற்குறிப்பிட்ட தேர்வுகளை எழுதி வெற்றி பெறுவது மிகவும் கடினமான ஒரு காரியமல்ல. அதேசமயம், CAT அல்லது XAT தேர்வுகளில் ஓரளவு சுமாரான மதிப்பெண்கள் பெற்றாலே, நடுத்தர அளவிலான புகழ்பெற்ற வணிகப் பள்ளிகளில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். ஏனெனில், அனைத்து வணிகப் பள்ளிகளும், மாணவர்களை தேர்வு செய்வதில் ஒரேமாதிரி கட்-ஆப் மதிப்பெண்களைக் கொண்டிருப்பதில்லை. நடுத்தர அளவிலான புகழ்பெற்ற வணிகப் பள்ளிகள், எண்ணிக்கையில் அதிகம் என்பதால், அதிகம் போராட வேண்டிய தேவை இருக்காது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !