உள்ளூர் செய்திகள்

பாடத்திட்டத்தை தாண்டிய பன்முகத்திறன் அவசியம்

செயற்கை நுண்ணறிவு திறனான, ஏ.ஐ., தொழில்நுட்ப பயன்பாடு, தற்போது பொறியியல், மருத்துவம், நிதி மற்றும் வங்கிகளில் அதிகரித்து வருகிறது. ஏ.ஐ., தனியாக படிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஆனால், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முழுமையாக கற்றுக் கொள்ள வேண்டும்.இந்த தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு ஏற்படாது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தாதவர்களுக்கு தான் பாதிப்பு ஏற்படும். மாற்றம் ஒன்றே மாறாது. காலத்துக்கு ஏற்ற தொழில்நுட்பத்துக்கு மாற வேண்டும். இதற்கான, திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் படிப்புக்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. செமி கண்டக்டர் துறை இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. ரோபோடிக்ஸ் சயின்ஸ் துறையில் வாய்ப்பு அதிகமாக உள்ளன. பொறியியல் படிப்பில் ஒரு பிரிவை எடுத்து படிப்பதற்கு முன், அது கேட் தேர்வின் பாடப்பிரிவில் இருக்கிறதா என பார்க்க வேண்டும்.கல்லுாரி தேர்வு செய்வதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அந்த கல்லுாரி, என்.ஐ.ஆர்.எப்., ரேங்கில் இருக்கிறதா என பார்க்க வேண்டும். கல்வி கட்டணம் எவ்வளவு, உதவித்தொகை எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.இ.சி., - இ.இ.இ., - சைபர் செக்யூரிட்டி, பையோ மெடிக்கல், வெர்சுவல் ரியாலிட்டி போன்ற பொறியியல் படிப்புகளுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. படிக்கும்போது, ஜப்பானிய மொழி அல்லது ஜெர்மன் மொழியை கற்றுக் கொள்ளுங்கள். மின்சார வாகனங்களின் பழைய பேட்டரிகளை எடுத்து, மறுசுழற்சி செய்து தொழில் துவங்கினால், நல்ல வாய்ப்புகள் உள்ளன. தேவையை அறிந்து படித்தால் தான் வேலைவாய்ப்பு பெற முடியும். உங்களது பாடத்திட்டத்தைத் தாண்டி, பன்முகத் திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும்.-ஜெயப்பிரகாஷ் காந்தி, கல்வி ஆலோசகர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !