உள்ளூர் செய்திகள்

வளர் இளம் பருவ விழிப்புணர்வு முகாம் மற்றும் ஆசிரியர் தின விழா

விழுப்புரம்: விழுப்புரம் ரோட்டரி சங்கம் சார்பில் வளர் இளம் பருவ விழிப்புணர்வு முகாம் மற்றும் ஆசிரியர் தின விழா நடந்தது. விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் சரவணக்குமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சதீஷ், குமார், காங்கேயன், சிங்காரவேலன், சையத் சார்புதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன், பள்ளி ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்