உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வை ரத்து செய்ய கையெழுத்து இயக்கம்: அமைச்சர் கணேசன் அழைப்பு

சிறுபாக்கம்: நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தி.மு.க., சார்பில் நடக்கும் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்க நிர்வாகிகளுக்கு மேற்கு மாவட்ட செயலாளர், அமைச்சர் கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:தி.மு.க., தலைவர், முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, தி.மு.க., இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி இணைந்து நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கையெழுத்து இயக்கம் நடக்கிறது. அதன்படி, தி.மு.க., மேற்கு மாவட்டத்தில் இன்று காலை 9:30 மணியளவில் நெய்வேலி தொ.மு.ச., அலுவலகத்தில் மாவட்ட தலைவர் நந்தகோபாலகிருஷ்ணன் தலைமையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கையெழுத்து இயக்கம் நடக்கிறது.இதில், தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள், நகர, பேரூர், ஒன்றிய நிர்வாகிகள், இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உட்பட அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்