உங்கள் கனவுகள் எங்கள் கனவுகள்; நாராயணா கல்வி குழுமம் விழிப்புணர்வு
ஹைதராபாத்: உங்கள் கனவுகள் எங்கள் கனவுகள் என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை, நாராயணா கல்வி குழுமம் அறிவித்துள்ளது.நாராயணா கல்வி நிறுவனங்களின் இயக்குனர்கள் டாக்டர் சிந்துாரா மற்றும் ஷாரணி ஆகியோர் கூறியதாவது:மிக சிறப்பான கல்வி வழங்குவதில், நாராயணா கல்வி நிறுவனங்கள் முன்னோடியாக திகழ்கின்றன. கற்பித்தல் என்பதை தாண்டிய கூடுதல் அம்சங்கள் எங்கள் நிறுவனங்களில் கிடைக்கும். எங்களிடம் படிக்க வருவோருக்கு, பரந்த அறிவையும், சிறந்த அனுபவத்தையும் கற்று தருகிறோம்.நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும், எங்களின் அர்ப்பணிப்பு மிக்க கல்வி சேவை கிடைக்கப்பெறும். எங்கள் நிறுவனம், தெலுங்கு மொழி பேசும் மாநிலத்தில் உருவாகி, தற்போது, 23 மாநிலங்களிலும், 230 நகரங்களிலும், எங்கள் நிறுவனம் விரிவடைந்துள்ளது. மொத்தம், 800 கல்வி நிறுவனங்களில், 50,000த்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.எங்கள் நிறுவனங்கள் வெறும் கட்டடங்களாக இல்லாமல், பன்முக கல்வியின் மையங்களாக விளங்குகின்றன. ஒவ்வொரு ஆண்டும் எங்களிடம் படிக்கும், ஆறு லட்சம் பேரின் கல்வி கனவு நனவாகிறது. இன்றைய தலைமுறையின் கனவுகள்தான் நாளைய இந்தியா என்பதை நாங்கள் அறிந்து வைத்திருக்கிறோம்.இதன் அடிப்படையில், நாளைய தலைவர்களை உருவாக்கும் நோக்கில், உங்கள் கனவுகள், எங்கள் கனவுகள் என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை துவங்கியுள்ளோம். இதன்படி, நாராயணா கல்வி நிறுவனங்கள் இன்னும் கூடுதல் பலத்துடன், நாட்டின் வளர்ச்சியை நோக்கி, கல்வியின் வழியே பங்களிப்பு செய்யும். எங்களின் இந்த பயணத்தில் அனைவரும் கைகோர்த்து, உங்கள் கனவுகளை நனவாக்குங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.