உள்ளூர் செய்திகள்

உயர்கல்வி மாணவர்களுக்கு தாமதமின்றி கல்வி கடன்: கலெக்டர்

ஊட்டி: உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி கடன் பெற வங்கியில் விண்ணப்பித்தால் காலதாமதமின்றி விரைவில் பரிசீலனை செய்து கடன் வழங்க தேவையான நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என, கலெக்டர் தெரிவித்தார்.ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் வங்கியாளர்கள் கூட்டம் நடந்தது.அதில், கலெக்டர் அருணா பேசியதாவது:கடன் பெற பொதுமக்கள் வங்கிகளை நாடிவரும்போது கடன் விண்ணப்பங்களை பெற்றவுடன் சம்பந்தப்பட்ட வங்கி நிறுவனங்கள், உடனடியாக அந்த விண்ணப்பங்கள் மீது பரிசீலனை செய்து, கடன் வழங்க முன்வர வேண்டும்.குறிப்பாக, உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்கள் கல்வி கடன் பெற வங்கியில் விண்ணப்பித்தால் அதனை காலதாமதமின்றி விரைவில் பரிசீலனை செய்து கடன் வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.எந்தவொரு விண்ணப்பங்களும் உரிய காரணங்கள் இல்லாமல் நிராகரிக்க கூடாது. ஒவ்வொரு துறைகளின் வாயிலாக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள், துறை அலுவலர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இலக்கை எட்ட துறை அலுவலர்கள் திறம்பட பணி செய்ய வேண்டும். இவ்வாறு, கலெக்டர் பேசினார். நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் அமிர்தவள்ளி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்