உள்ளூர் செய்திகள்

தேர்வு நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி; தலைமையாசிரியர்கள் அதிருப்தி

பொள்ளாச்சி: தேர்வு நாட்களில், ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு அளிப்பதை தவிர்க்க வேண்டும் என, தலைமையாசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்னளர்.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவ்வகையில், தற்போது, திறன் மாணவர்கள் என்ற தலைப்பில் கற்றலில் பின்தங்கிய மாணவர்கள் கண்டறியப்பட்டு, தீவிர எழுத்து மற்றும் வாசிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.அதற்காக, ஆசிரியர்களுக்கு, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வாயிலாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால், முதல் இடை பருவத் தேர்வு நடக்கும் போது, ஒரு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் இருந்து, 5 முதல் 6 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால், முறையாக தேர்வை நடத்த முடியவில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை பொறுத்தமட்டில், 6 முதல் 9ம் வரையுள்ள வகுப்புகளில், படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்தப்படுகிறது. இதற்காக, ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.அதாவது, எந்த பாடத்தில் மாணவர்கள் பின்தங்கியுள்ளனர், மாணவர்களின் தனித்திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்துதல், மாணவர்களிடம் புதிய திறன்களை வளர்த்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி, தேர்வு நாட்களின் போது, அளிக்கப்படுவதால், குறிப்பிட்ட சில பள்ளிகளில் அதிக ஆசிரியர்கள் பயிற்சிக்காக சென்று விடுகின்றனர். தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது.அதேநேரம், சிலர், படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தவும் தவறி விடுகின்றனர். எனவே, தேர்வு, விளையாட்டு இடைவெளி நாட்களை அறிந்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்